தேவையான பொருட்கள்
பச்சரிசி : 300 மி.லி.
கஞ்சிக்கு பச்சரிசி குருணை : 75 மி.லி.
வறுத்த பாசிப்பருப்பு : பிரியப்பட்ட அளவு போல் கொஞ்சம்
தேங்காய் : 1
சோடா உப்பு : ½ தேக்கரண்டி நிலை கட்ட
கருப்பட்டி : 150 கிராம்
முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிஸ்மிஸ் பழம்
செய்முறை
பச்சரிசியை இடித்து நைஸாக சலிக்கவும். 75 மி.லி. அரிசி குருணையை ரவை மாதிரி எடுத்து வைக்கவும். ஆப்பத்திற்கு கஞ்சி காய்ச்சுவது போல் குருணையில் காய்ச்சி, வெது வெதுப்பான கஞ்சியில் அரிசிமாவை ஒரு நாள் முன்னதாக இரவில் பிசைந்து வைக்கவும்.
மறுநாள் காலையில் பாசிப்பருப்பு, தேங்காய்ப்பூ, முந்திரிப்பருப்பு, ஏலப்பொடி, கிஸ்மிஸ் பழம், சோடா உப்பு, கருப்பட்டி சேர்த்து ஆப்ப மாவை விட சற்று கட்டியாக வைத்து இட்லித் தட்டில் விட்டு வேக வைக்கவும். சுவையான விவிகா தயார்.