வீட்டுக் குறிப்புகள்

1. சில சமயம் இட்லி மாவு உளுந்து விளுது காணாமல் கல் மாதிரி இருக்கும், மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்.
2. பால் இளஞ் சூடாக இருக்கும் போது உறை ஊற்றினால் தான் தயிர் நன்றாக தோயும், சுவையும் இருக்கும்.

3. பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி ரவையை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.

4. தேங்காயை சிறுதுண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.

5. பால் தயிர் ஆடையை தனியே எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்துக் கடைந்தால் சில நிமிடங்களில் வெண்ணை உருண்டு நன்றாக வரும்.

6. தோசைக்கு, இட்லிக்கும் ஆட்டும்போது ஒரு வெண்டக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.

7. பாத்ரூமில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரூம் மணம் வீசும்.

8. பற்கள் மஞ்சளாக இருந்தால் எலுமிச்சை தோலுடன் சிறிது உப்பு கலந்து தேய்த்துவரின் பல் வெண்மையாகி விடும்.

9. தேமல் உள்ள இடத்தில் பூண்டும், வெற்றிலையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால் தேமல் மறைந்து விடும்.

10. பட்டுப் புடவையில் கறை ஏற்பட்டால் சிறிது யூக்கலிப்டஸ் தைலம் தடவினால் கறை போய் விடும்.

11. சீகைக்காயுடன் சிறிது வேப்பம்பூவையும் சேர்த்து அரைத்தால் தலைமுடி சுத்தமாவதுடன் நீண்ட நாட்கள் சீயக்காயில் பூச்சி வராது.

12. சூடுபட்ட இடத்தில் சிறிது உப்புத்தூளைத் தடவினால் கொப்பளமும் போடாது, எரிச்சலும் இருக்காது.

13. வெள்ளிப் பாத்திரங்களைப் பற்பசை வைத்துத் தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

14. பிளாஸ்க்கில் உள்ள துர்நற்றம் அகல வினிகர் போட்டுக் கழுவலாம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: