வீதியிலே பிள்ளையாரு

வீதியிலே பிள்ளையாரு – நம்ம

வாசலிலே நிக்குறாரு

பாதியிலே வந்துஇங்க நிற்குறாரு – உன்ன

பார்த்து பேசி போகத்தான் தேடுறாரு

 

தேதியிப்ப என்னாச்சு – எழுதும்

தேர்வின் நிலை என்னாச்சு

பீதியில உன்முகமோ வாடிப்போச்சு – அதை

போக்கிடத்தான் பிள்ளையாரும் வந்தாச்சு

 

மோதி நிற்கும் ஆங்கிலமோ – இனி

முத்தம் தரும் நிலை வரும்

வேதியியலும் உன்னோடு கைகோர்க்க – இனி

வேண்டுமென நல்லவரம் கேட்டுப்பாரு

 

ஆதி முதல் அந்தம் வரை -இவ்வுலகில்

அழகு கணக்கின்றி ஏதுமில்லை

பாதியில நிற்காம ஓடச்செய்ய – நீ

பக்குவமா ஒருவரம் கேட்டுப்பாரு

 

சேதி எல்லாம் செய்தியாகும் – அதில்

சேர்வது எல்லாம் வரலாறாம்

போதிமரம் புத்தனுக்கு தந்த அறிவை – உனக்கு

புத்தகமே தந்திடனும் கேட்டுப் பாரு

-இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.