கோதையுடன் கோபாலன்
வீதி வரும் வேளையிலே
பாவை தந்த பாவையவள்
பார்வை நமக்கும் கிடைக்குமன்றோ!
தோகைமயில் ஆடும் போது
மேகம் மகிழ காண்பதுபோல்
தேரில் இருந்து ஆண்டாளும்
நம்மைக் கண்டு மகிழ்வாளே!
வாகை சூட வேண்டும் எனில்
வடம் பிடிக்க வாங்க நீங்க!
வளரும் செல்வம் பெருகிடவே
வாழ்வு சிறக்கும் உண்மைதாங்க!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!