வீரன்

வீரன்

ஜல்லிக்கட்டில் திமிறிய காளையை துரத்தி வந்து அதன் திமிலைப் பிடித்து அடக்கினான் லிங்கம். வெற்றிக் களிப்பில் கறிச்சோறு தின்றுவிட்டு பரிசாக கிடைத்த பணமுடிப்பை கையில் வைத்துக் கொண்டு தன்னை திருமணம் செய்ய மறுத்து வரும் முறைப்பெண் வசந்தியைப் பார்க்கப் புறப்பட்டான்.

வசந்தி குளத்தங்கரையில் துணி துவைத்துக் கொண்டு நின்றாள். அவளுக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து நின்றான் லிங்கம்.

’’பாத்தியா! காளைய அடக்கி பணமுடிப்பும் வாங்கிட்டேன், இப்ப சொல்லு, இந்த வீரன கட்டிக்கிறியா இல்ல அந்த ஒல்லிப்பிசாசு தங்கவேலுவ கட்டிக்கப் போறியா?’’

’’தங்கவேலு உன்னவிட வீரன். நான் அவனத் தான் கட்டிக்குவேன்!’’ வசந்தி முடிவாகச் சொன்னாள்.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்