சமத்துவம் குடிகொண்டு
பொதுவுடைமை நிலை நின்று
சகோதரத்துவம் கை கோர்த்து
எள்ளளவும் தன்னலமின்றி
குதூகலிக்கும் குழந்தை உள்ளம்
இராணுவ வீரர் உள்ளம்
உங்கள் தியாகத்தை போற்றி வழிபடும் நாங்கள்
உங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை மட்டும்
சகிக்க முடியாமல் தவிக்கின்றோம்
கையறு நிலை கற்றதோடு சரி இன்று
அனுபவிக்க முடியாது திணறுகிறோம்
உங்களால் எங்களுக்கு சுதந்திர சுவாசம்
எங்களால் உங்களுக்கு இல்லை ஒரு வாசம்
எல்லாம் தெரிந்து தேசம் காப்பீர் அது உம் நேசம்
எதுவும் கடந்து போகுமெனினும்
இந்நிலை நடவாது கனவாய் இருந்துவிட
ஏங்கும் எங்களுக்கு சகோதரர்களே
மறக்கவொண்ணா துயரீந்தீரே….