தடம் பதிக்க முனையும் மனிதனை
தடயம் ஏதுமின்றி அழிக்க நினைக்கும்
விடம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில்
இடம் பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
இடர் நிறைந்த வாழ்விற்கு இடையில்
தொடர்வண்டியாய் நித்தம் தொடர்ந்து செல்வதே
துயர் துடைத்து உயிர் வாழ்ந்து
உயர் வாழ்வை அடையும் உபாயமாகும்
இழப்பு என்பது வாழ்வின் இயல்பே
இழந்ததை நினைத்து இயங்காமல் இராதே
வீழ்வது தவறில்லை வீழ்ந்தும் எழாமல்
வீழ்ந்து கிடப்பதே தவறென் றாகும்
தடைகள் கடந்து உழைக்கும் என்னை
தகர்க்க நினைக்க எவரும் இல்லை
உழைப்பின்றி உறக்கம் கொள்ளும் அற்ப
மனிதரைப்போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!