வெஜ் குருமா செய்வது எப்படி?

வெஜ் குருமா சப்பாத்தி மற்றும் பூரிக்கு பொருத்தமான சைடிஷ். இதனுடைய சுவை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.

இதில் பலவிதமான காய்கறிகள் சேர்க்கப்படுவதால் இது சத்து மிகுந்ததும் கூட. இனி சுவையான வெஜ் குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கை பீன்ஸ் – 8 எண்ணம் (நீண்ட தட்டையானது)

கேரட் – 1 எண்ணம் (பெரியது)

பச்சை பட்டாணி – 50 எண்ணம்

உருளைக் கிழங்கு – 1 (மீடியம் சைஸ்)

பட்டர் பீன்ஸ் – 25 எண்ணம்

காலி பிளவர் – 3 சுளை (மீடியம் சைஸ்)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கல் உப்பு – தேவையான அளவு

கொத்த மல்லி இலை – சிறிதளவு

மசால் அரைக்க

மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்

சீரகப் பொடி – ¾ ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – ¾ ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – ¾ ஸ்பூன்

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

தாளிக்க

கடுகு – ½ ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

செய்முறை

முருங்கைப் பீன்ஸை நறுக்கி நாரினை நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் துண்டுகளாக்கவும்.

கேரட்டினை கழுவி சதுரத் துண்டுகளாக்கவும்.

உருளைக் கிழங்கினைக் கழுவி சதுரத் துண்டுகளாக்கவும்.

காலிபிளவரினை வெந்நீரில் முக்கி எடுத்து சிறுதுண்டுகளாக்கவும்.

பச்சை பட்டாணியையும், பட்டர் பீன்ஸையும் கழுவி வைக்கவும்.

 

வெட்டப்பட்ட காய்கறிகள்
வெட்டப்பட்ட காய்கறிகள்

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும்.

தேங்காயை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கவும்.

மிக்ஸியில் துண்டுகளாக்கிய தேங்காய், மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலாப் பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து மசால் தயார் செய்யவும்.

 

தயார் செய்யப்பட்ட ம‌சால்
தயார் செய்யப்பட்ட ம‌சால்

 

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், கடுகு, சதுரமாக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின் அதில் நீளவாக்கில் வெட்டிய‌ பெரிய வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

 

பெரிய வெங்காயத்தை வத‌க்கும் போது
பெரிய வெங்காயத்தை வத‌க்கும் போது

 

இரண்டு நிமிடங்கள் கழித்து வெட்டி வைத்துள்ள எல்லா காய்களையும் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

 

காய்கறிகளை வத‌க்கும் போது
காய்கறிகளை வத‌க்கும் போது

 

பின் அதனுடன் தயார் செய்து வைத்துள்ள மசால் தேவையான தண்ணீர், தேவையான கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.

 

மசாலைச் சேர்க்கும் போது
மசாலைச் சேர்க்கும் போது

 

ஒரு விசில் வந்தவுடன் அடுப்பினை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரினைத் திறந்து பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலையைச் சேர்த்து கிளறி விடவும்.

 

கொத்தமல்லி இலையைச் சேர்க்கும் போது
கொத்தமல்லி இலையைச் சேர்க்கும் போது

 

சுவையான வெஜ் குருமா தயார்.

 

சுவையான வெஜ் குருமா
சுவையான வெஜ் குருமா

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக  மசாலா பொடி 2½ ஸ்பூன் சேர்த்து குருமா தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் பட்டை, சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளிதம் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் முந்திரிப் பருப்பு, கசகசா சேர்த்து மசால் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.