வெஜ் ரவா கிச்சடி செய்வது எப்படி?

வெஜ் ரவா கிச்சடி காலை மற்றும் இரவு நேரங்களில் உண்ணத்தக்க அருமையான சிற்றுண்டி.

இட்லி, தோசை போன்றவற்றிற்குப் பதிலாக எளிதில் செய்யக்கூடிய சிற்றுண்டி.

வீடுகளில் இட்லி மாவு காலியாக உள்ளபோது இதனைச் செய்து உண்ணலாம்.

ரவையையும், தண்ணீரையும் அளந்து சரியான அளவில் வைத்து இதனைச் செய்யும்போது செய்முறையும் எளிது, சுவையும் நன்று.

இனி சுவையான வெஜ் ரவா கிச்சடி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ரவா – 1 கப் (200 கிராம்)

தண்ணீர் – 2 கப்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

தக்காளி – 1 எண்ணம் (சிறியது)

முருங்கை பீன்ஸ் – 4 எண்ணம்

காரட் – 1 எண்ணம் (பெரியது)

இஞ்சி – 1 இன்ஞ் அளவு

கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

புதினா இலை – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 ஸ்பூன்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

செய்முறை

பெரிய வெங்காயத்தை தோல்நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

த‌க்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலை மற்றும் புதினா இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ரவாவை சேர்த்து அடுப்பினை மீடியத்தில் வைத்து, நிறம் மாறாமல் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும்.

ரவையை வறுக்கும்போது

வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் அதில் சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்ததும்

கடுகு வெடித்ததும் அதில் உளுந்தம் பருப்பினைச் சேர்க்கவும்.

உளுந்தம் பருப்பு சேர்த்ததும்

பருப்பு நிறம் மாறியதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பச்சை மிளகாய் சேர்த்ததும்

30 விநாடிகள் கழித்து அதில் நசுக்கிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி சேர்த்ததும்

பச்சை வாசனை நீங்கியதும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பெரிய வெங்காயம் சேர்த்ததும்

வெங்காயம் கால்பாகம் வெந்ததும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து முருங்கை பீன்ஸ் சேர்த்துக் கிளறவும்.

முருங்கைபீன்ஸ் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் கேரட் சேர்த்து வதக்கவும்.

கேரட் சேர்த்ததும்

முருங்கை பீன்ஸ் மற்றும் கேரட் பாதி வதங்கியதும் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலையில் பாதியைச் சேர்த்து வதக்கவும்.

30 விநாடிகள் கழித்து அதனுடன் காய்கறிக்குத் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்ததும்

காய்கறிகள் வெந்ததும் அதில் ரவை போல இருமடங்கு தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சேர்த்ததும்

த‌ண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அதில் ரவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

ரவையைச் சேர்க்கும் போது

ரவையை சேர்க்கும்போது கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும்.

ரவையைச் சேர்த்து முடித்ததும் அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

வேகும் போது

மூன்று நிமிடங்களில் ரவை வெந்து கெட்டிப்படத் துவங்கும். அடுப்பினை சிம்மில் வைத்து இப்போது 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.

நெய் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் மீதமுள்ள நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலையைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பினை அணைத்து விடவும்.

கொத்தமல்லி மற்றும் புதினா இலையைச் சேர்த்ததும்

இப்போது 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

சுவையான வெஜ் ரவா கிச்சடி தயார். இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து உண்ணப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சைப் பட்டாணி மற்றும் குடைமிளகாய் சேர்த்து கிச்சடி தயார் செய்யலாம்.

ரவையைச் சேர்க்கும்போது கிளறி விட்டால் கட்டி தட்டாது.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.