தேவையான பொருட்கள்
பச்சரிசி 400 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகு 1½ டீ ஸ்பூன்நெய் 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிபருப்பு 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
பச்சைமிளகாய் 3 பெரியது
தண்ணீர் 1200 மில்லி லிட்டர்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை கழுவி 1200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். வாணலியில் எண்ணெய் தேவையான அளவு உற்றி அதில் சீரகம், மிளகு, முந்திரிபருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி குக்கரில் சேர்க்கவும், குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஐந்து விசில் வந்ததும் நெய் சேர்க்கவும். சுவையான வெண்பொங்கல் தயார்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!