காதலன் காதலி இருவரும் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக சீண்டிப் பாடும் வகையில் அமைந்த அருமையான காதல் பாட்டு.
(காதலன் பாடுவது)
முள்ளுக்காடு தாண்டி
மூணுமணி நேரம் தேடி
சுள்ளி எடுத்து வந்து
சோறு பொங்க போறவளே!
வெள்ளை மனசோட
நானுமிங்க காத்திருக்கேன்
வெந்த கஞ்சி கொஞ்சம் போல
கொண்டு வர வேணுமடி!
(காதலி பாடுவது)
பொல்லாப் பிள்ளையாரு
போக்கத்த வெட்டியாளு
குள்ளநரி போல வந்து
கொஞ்சிப் பேசிப் பாக்குறாரு!
வெள்ளாமை காட்டிலிட்டு
வேகமாக பாதுகாத்து
நெல்லரிசி கொண்டுவந்த
எங்கப்பனுக்கே சோறிருக்கு!
(காதலன் பாடுவது)
நெல்லுக்கு பாஞ்ச தண்ணீ
புல்லுக்கும் பாயுமடி
துள்ளிவரும் காற்றுமிங்கே
எல்லாருக்கும் வீசுமடி!
முல்லைப்பூ கொண்டைக்காரி
முக்கனிபோல் வார்த்தைக்காரி
கொல்லையில நீ கொடுக்கும்
சோத்துக்கே நான் காத்திருப்பேன்!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!