விடிந்திடும் பொழுதும் விடிந்திடும் என்றே
வீணாய் காலம் கழித்திட வேண்டாம்
துடிப்புடன் நீயும் துணிந்தே எழுந்தால்
தொலைந்தே போகும் துன்பங்கள் எல்லாம்
இருப்பதைத் தின்று இருக்கையில் கிடந்து
இயலாது எனும் மனநிலை வேண்டாம்
கருத்தாய் நாளும் உழைத்திட வாழ்வும்
கரும்பாய் இனித்திடும் மறந்திட வேண்டாம்
எண்ணிய தெல்லாம் செயல்படக் கூடும்
ஏற்றமும் வாழ்வில் மலர்ந்திடக் கூடும்
திண்ணமாய் நாமும் திறம்பட உழைக்க
திருமகள் கருணையும் கிடைத்தே தீரும்
வெறும் கை என்பது மூடத்தனம் நம்
விரல்கள் பத்தும் மூலதனம்
விரும்பிய வாழ்வைப் பெற அவையே
வெற்றிச் சாதனம் ஆகும்.
– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942