வெற்றிட கருப்பையில் உருவாகி
வெற்றிட சுவர்களுக்கு இடையில்
வெற்றிடம் விதைத்தறுத்து
வெற்றிட வயிற்றை நிரப்பி
வெற்றிட சுற்றத்தில்
வெற்றிட நிலத்தில் வசித்து
வெற்றிடக்காற்று நிறைந்த
வெற்றிட மெல்லாம் நமதென
நமதையே நாம் நிறைக்க
வெற்றிட மதிப்பறியா
உடல் விட்டு வெளியேறும்
உயிரெனும் வெற்றிடம்!
சுரேஷ் குமார்
திருப்பூர்
9894808779
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!