வெற்றியடைய செய்ய வேண்டியவை

ஒரு மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்கிறான். எனினும் பல நேரங்களில் தோல்வி தான் ஏற்படுகிறது.

அவ்வாறு தனது முயற்சியில் தோற்றவுடன் விரக்தியின் உச்சிக்கு சென்று விடுகிறான். அவ்வாறு செல்லாமல் ஒவ்வொருவரும் வெற்றியடைய செய்ய வேண்டியவை மற்றும் வெற்றியின் ரகசியம் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றி பெற்றவர்கள் எவ்வாறு அதனைச் சாதித்தார்கள் என்பதை கீழ் காணும் 20 வேண்டும் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வேண்டும் வேண்டும்

1. எதனையும் சாதிக்க வேண்டும் என்ற சபதம் வேண்டும்.

2.எப்படியும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்

3.எவ்வாறும் வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு வேண்டும்.

4.நாம் அடைவதற்கான ஒரு லட்சியத்தை வகுக்க வேண்டும்.

5.அப்படி உருவாக்கிய அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் காட்ட வேண்டும்.

6.வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்றன தாகம் வேண்டும்.

7.வாய்ப்பு வரவில்லை என்றால் அதனை உருவாக்கும் திறமை வேண்டும்.

8.உணவு, உறக்கம் இவற்றைக் கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு வேண்டும்.

9.தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தராள மனது வேண்டும்.

10.அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் வேண்டும்.

11.தங்களின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற இடம் எங்கே என்கின்ற தேடல் வேண்டும்.

12.தொடர்ந்து எந்த வகையிலாவது தனது திறமைகளைக் கூட்டிக் கொள்ளும் பழக்கம் வேண்டும்.

13.சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்துப் போகும் அடக்கம் வேண்டும்.

14.விமர்சனத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் விவேகம் வேண்டும்.

15.அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை வேண்டும்.

16.குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை வேண்டும்.

17.கடமைகள் காத்து கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியைச் செலுத்தாத பொறுப்பு வேண்டும்.

18.நேற்றைவிட எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் வேண்டும்.

19.நம்முடைய குறிக்கோள்களைச் செயல்படுத்துவதற்கான செயல்களில் நேர்மை, வாய்மை வேண்டும்.

20.இத்தனைக்கும் அடிப்படையாய் தன்னிடத்தில் அசைக்க முடியாத தன்னம்பிக்கை வேண்டும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.