நீயே வெற்றியாளன்!
தோல்விகளை கண்டு துவண்டு விடாதே
தோல்வியில் நீ கற்றுக்கொள்ளும் பாடம்
உன் வெற்றிக்கு வாசல் படி அமைக்கும்
அவமானங்களைக் கண்டு கொள்ளாதே
அவற்றைத் தடைக்கற்களாய் எண்ணாதே
படிக்கற்களாய் மாற்று
எதிர்ப்புகளுக்கு மதிப்பளிக்காதே
விமானம் கூட காற்றின் எதிர்ப்பை மீறித் தான்
விண்ணில் பறக்கிறது – தன்னம்பிக்கையோடு
தடைகளைக் கடந்து வா!
நீயே வெற்றியாளன்!
இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்
கைபேசி: 8903308535
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!