வெற்றியின் திறவுகோல் – இரா.முத்துக்கருப்பன்

தோல்விகள் பல வந்தாலும் கவலைப் படாதே!

நீ தோற்கவில்லை – வெற்றிக்கான

வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாய்!

தொடர்ந்து முயற்சி செய்

தோல்வியே உன்னிடம் தோற்கும் வரை!

வெற்றியில் கிடைப்பது இன்பம்

தோல்வியில் கிடைப்பது அனுபவம்

அனுபவங்கள் வெற்றிக்கு வழி அமைக்கும்!

முயற்சித்துக் கொண்டேயிரு – வெற்றிக்கான

வழி கிடைக்கும் – அது

உலகிற்கே பயன்படும் கண்டுபிடிப்பாகும்!

ஆயிரம் தோல்விகளுக்குப் பின்

வெற்றிக்கான வழியைக் கண்டார் எடிசன்!

உருவானது உலகை ஒளிரச் செய்யும்

மின்சார பல்பு என்னும் அதிசயம்!

தோல்விகளிலே நின்றுவிடாதே;

தோல்வியே வெற்றியின் திறவுகோல்!

இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.