நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தால்
நேரம் தான் வீணாகும்
சோம்பலை விட்டுவிடு!
ஒளிரும் சூரிய ஒளியில் மறையும்
பனித்துளி போல் – உன்னில்
உதிக்கும் தன்னம்பிக்கை ஒளியில்
மறைந்து போகட்டும் சோம்பல் குணம்!
நேரத்தை சரியாக பயன்படுத்து
நேற்றைவிட இன்று ஒருபடி முன்செல்
நீ வீணாக்குவது நேரத்தை மட்டுமல்ல
உன் வாழ்க்கையையும் தான்!
வெற்றியாளர்களின் பக்கங்களை
புரட்டிப் பார்
நேரத்தின் அருமை அறிவாய்!
ஒவ்வொரு நொடியையும்
பயனுள்ளதாக்கு – உனக்கான
வெற்றிப் பக்கங்களை உருவாக்கு!
இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்
கைபேசி: 8903308535
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!