வெற்றி காண்கிறார்!

குருடர்களும் தம் உழைப்பினாலே வெற்றி காண்கிறார்
திருந்தாமல் பிறர் உழைப்பினிலே சிலர் குருடராகிறார்

கண்கள் இருளானது விதியென்று மறந்து வாழ்கிறார்
எந்நாளும் தன் பாதையிலே ஒளியை காண்கிறார்

இருளும் ஒன்று பகலும் ஒன்று கண்ணில் வேறுபாடில்லை
வருங்காலம் சிறப்பாகும் அவர் கருத்தில் மாறுபாடில்லை

கண்ணிழந்த மேதைகள் பலர் இப்பாரினில் உண்டு
தன் திறமையினால் உயர்வு கண்டால் உலகம் வாழ்த்திடும் பின்பு…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com