வெள்ளைப் பூண்டு குழம்பு செய்வது எப்படி?

வெள்ளைப் பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. பூண்டினை உணவில் எளிதான வகையில் சேர்த்துக் கொள்ள அதனை குழம்பு செய்து உண்ணலாம்.

சுவையான வெள்ளைப் பூண்டு குழம்பு செய்முறை பற்றி பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

வெள்ளைப் பூண்டு குழம்பு வைக்கத் தேவையான பொருட்கள்
வெள்ளைப் பூண்டு குழம்பு வைக்கத் தேவையான பொருட்கள்

வெள்ளை பூண்டு – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

 

மசாலுக்கு

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

மல்லித்தூள் – 1 ½ ஸ்பூன்

சீரகத்தூள் – ¾ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ¾ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ¾ ஸ்பூன்

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 50 கிராம்

கடுகு – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை

முதலில் வெள்ளைப்பூண்டினை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

துருவிய தேங்காயுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து
மிக்ஸியில் மசாலா தயார் செய்யவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

கடுகு வெடித்தவுடன் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய வெங்காயம், தோலுரித்த வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

வெள்ளைப் பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கும்போது
வெள்ளைப் பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கும்போது

 

இருநிமிடங்கள் கழித்து தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கும்போது
தக்காளி சேர்த்து வதக்கும்போது

 

தக்காளி சுருள வதங்கியவுடன் மசாலாக் கலவையைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு வதங்கிய நிலையில்
நன்கு வதங்கிய நிலையில்

 

மசால் சேர்த்ததும்
மசால் சேர்த்ததும்

குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

கொதி நிலையில் குழம்பு
கொதி நிலையில் குழம்பு

 

தயார் நிலையில் குழம்பு
தயார் நிலையில் குழம்பு

இப்போது சுவையான பூண்டு குழம்பு தயார். இதனை வெள்ளை சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். தாய்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்றது இக்குழம்பு.

 

குறிப்பு

இக்குழம்பிற்கு ஒருப்பூண்டு என்ற பூண்டுரகப் பூண்டைப் பயன்படுத்தவும். இதனால் குழம்பின் சுவை மிகும்.

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி குழம்பு கொதிக்கும் போது சேர்க்கவும். இதனால் குழம்பின் சுவை மற்றும் மணம் அதிகரிக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

One Reply to “வெள்ளைப் பூண்டு குழம்பு செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.