வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
Comments
“வெள்ளை நிறத்தொரு பூனை” அதற்கு 2 மறுமொழிகள்
மகாகவியின் கவிதைகளை இப்படிப் பொதுவெளியில் வாசிப்பது என்பது நமது பள்ளிப்பருவத்தை மறுபடியும் மீட்டெடுப்பது போல் இருக்கிறது. தொடர்ந்து அவரின் கவிதைகளை வகைக்கொன்றாய் வெளியிடக் கோருகிறேன்.
இந்த கவிதையை எங்கள் பள்ளி குடியரசு நாள் விழாவில் குழந்தை களுக்கு ‘இந்தியரனைவரும் சமம்’ என்ற கருத்தை வலியுறுத்த பகிர்ந்து கொண்டேன்.