ஹவுஸ் ஓனர்!

தனது மனைவியோடு வாடகை வீட்டைப் பார்த்தார் ராமசாமி.

“என்னங்க, வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அட்வான்ஸ், வாடகை எவ்வளவுன்னு கேட்டு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுங்க.” அவரது மனைவி துரிதப்படுத்தினாள்.

“வாடகை ஐந்தாயிரம். அட்வான்ஸ் ஒரு லட்சம்” சொன்னார் வீட்டுக்காரர்.

“சரிங்க; நாங்க போன் பண்ணுறோம்” என்றபடி அவரது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு புறப்பட்டார் ராமசாமி.

“ஐம்பதாயிரம் அட்வான்ஸ்ன்னா வாடகைக்கு குடி போயிருந்திருக்கலாம். 20 மடங்கு அட்வான்ஸ் கேட்டா யார் போவா?” சலிப்பாக சொன்னார் ராமசாமி.

“என்னங்க! வாடகையை பாக்குறப்போ குறைவுதான். அட்வான்ஸ் தான் அதிகம். நம்ம பேங்க் அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை எடுத்து, இந்த வீட்டுக்கே வாடகைக்கு குடி போலாங்க” அவரது மனைவியின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் வாடகைக்கு குடியேறினார்.

ஒரு வருடம் கழிந்து, அவருக்கு பணி மாற்றம் கிடைக்கவே, வீட்டை காலி செய்து விட்டு அட்வான்ஸ் தொகையை திரும்பக்கேட்டார் ராமசாமி.

வீட்டுக்காரர் வாங்கிய ஒரு லட்சத்தோடு 5000 சேர்த்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் பணத்தை கொடுத்தார். ராமசாமி ஆச்சரியப்பட்டு “எதற்கு இந்த ஐந்தாயிரம்?” என்று கேட்டார்.

வீட்டுக்காரர் சொல்லச் சொல்ல “இந்த காலத்துல இப்படி ஒரு வீட்டுக்காரரா?” அவரைப் பார்க்கப் பார்க்க பெருமையாக இருந்தது ராமசாமிக்கு.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.