பத்மபூசன் விருது வென்ற தயான் சந்த் சிங் இந்திய ஹாக்கி அணியின் கதாநாயகனாக திகழ்ந்தார். 1905ல் ஆகஸ்ட் 29ம் தேதி அலகாபாத்தில் பிறந்த இவர் 3 முறை இந்திய அணி தங்கப்பதக்கம் பெறுவதில் முக்கிய பங்காற்றினார்.
1936ல் ஜெர்மனி பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. அதில் இவரது ஆட்டத்தைக் கண்ட அந்நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் தயான் சந்தை தனியாக சந்திக்க வேண்டும் என்று அழைத்தார். அழைப்பை ஏற்று ஹிட்லரை சந்தித்த போது “நீ என் நாட்டிற்காக விளையாட வேண்டும் உனக்கு ராணுவத்தில் மிக உயரிய பதவி தருகிறேன்” என்று ஹிட்லர் கூறினார். அதற்கு தயான் சந்த் மறுப்பு தெரிவித்து விட்டு கிளம்பினார்.
போட்டியின் போது தயான் சந்த் கையில் வைத்து விளையாடிய ஹாக்கி மட்டையை உடைத்துப் பார்த்து விட்டு பின் வேறொரு மட்டை கொடுத்து விளையாடச் செய்தாராம் ஹிட்லர். அதிலும் அவர் டிரிபிளிங் திறனை திறம்பட வெளிப்படுத்தினார். ஆகவே அவரை ஹாக்கி மந்திரவாதி என்று அழைப்பர். பிராட்மேன் ஒருமுறை தயான்சந்த்தை “கோல் மெஷின்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
தயான் சந்த் தன்னுடைய 72 வயதில் கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோயால் அவதிப்பட்டார். அப்பொழுது மருத்துவ வசதி கிடைக்காததால் அரசு மருத்துவமனையில் பொது வார்டில் மருத்துவம் பார்த்தார். 1979ல் டிசம்பர் 3ம் தேதி ஹாக்கி மந்திரவாதியை மரணம் விழுங்கியது.
அவருக்கு அர்ஜுனா விருது கூட வழங்கப்படவில்லை. அவருடைய பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.
– த.முருகேசன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!