ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்

இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கும் முன் அதனைத் தவிர்க்க வேண்டி காந்தி ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் தமிழாக்கம் மற்றும் ஆங்கில வடிவம் இங்கே உள்ளது. படித்துப் பாருங்கள்.

 

வார்தாவிலிருந்து
சி.பி
இந்தியா
23-07-1939

 

அன்புள்ள நண்பரே,

 

மனித வர்க்கத்தைக் காக்கும் நிமித்தமாக உங்களுக்குக் கடிதம் எழுத நண்பர்கள்

தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னிடமிருந்து வரும்

கடிதத்திற்கும் முக்கியத்துவம் இருக்காது என்ற உணர்வால் நான் அவர்கள்

வேண்டுகோளை மறுத்து விட்டேன்.

 

நான் இப்படியெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை என்றும், என் கடிதம் எந்த

அளவுக்கு மதிக்கப்படும் என்று எண்ணிப் பார்க்காமல் நான் தங்களிடம் முறையீடு

செய்தே ஆக வேண்டும் என்றும் ஏதோ ஒன்று எனக்குள் சொல்கிறது.

 

மனித வர்க்கத்தை காட்டுமிராண்டி நிலைக்குக் குறைக்கும் போரைத் தடுத்து நிறுத்தக்

கூடிய ஒருவர் இவ்வுலகில் இன்று உண்டு என்றால், அது நீங்கள் தான். உங்கள் நோக்கம்

எவ்வளவு உன்னதமாக உங்களுக்குத் தோன்றினாலும், அதற்கு நீங்கள் இவ்வளவு பெரிய

விலை கொடுக்க வேண்டுமா?

 

மிகச்சிந்தித்து நிதானமாக, போர் வழி முறையைத் தவிர்த்து அதில் ஓரளவு வெற்றி

பெற்ற ஒருவனுடைய வேண்டுகோளுக்கு, நீங்கள் செவி மடுப்பீர்களா? எவ்வாறாகினும்,

உங்களுக்கு இக்கடிதம் எழுதி நான் தவறு இழைத்திருந்தால் அதற்காக உங்கள்

மன்னிப்பை நான் எதிர் நோக்குகிறேன். நான் அமைகிறேன்.
தங்கள் உண்மையுள்ள நண்பர்,

மோ.க.காந்தி

 

பெறுநர்

திரு.ஹிட்லர்

பெர்லின்

ஜெர்மனி

 

தமிழாக்கம்: – எம்.காமராஜ்

 

ஆங்கில வடிவம்

 

ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்
ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.