ஹேப்பி நியூ இயர் பாடுங்கள்!

ஹேப்பி நியூ இயர் பாடுங்கள்

ஹேப்பி நியூ இயர் பாடுங்கள் – அது

கேட்டதை கொடுக்கும் பாருங்கள்!

பூப்போலவே உலகினை மாற்றுங்கள் – அதில்

புன்னகை விதைகளைத் தூவுங்கள்!

 

சிப்பியில் வளர்ந்திடும் முத்தெனவே – நம்

சிந்தனை வளர்ந்திட செய்யுங்கள்!

எப்பொழுது எனினும் நம்வாழ்வில் – ஏற்ற

இனிமை நிறைந்திட செய்யுங்கள்!

 

ராப்பகல் பேதம் இல்லாமல் – நல்ல

ராகங்கள் பாடியே மகிழுங்கள்!

தீப்பொறி எனவே எழுந்தாலும் – உலகில்

தீமைகள் அகற்றிட செய்யுங்கள்!

 

ஹேப்பி நியூ இயர் பாடுங்கள் – அது

கேட்டதை கொடுக்கும் பாருங்கள்!

பூப்போலவே உலகினை மாற்றுங்கள் – அதில்

புன்னகை விதைகளைத் தூவுங்கள்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.