அரிசி இனிப்புக் கூழ் செய்வது எப்படி?

அரிசி இனிப்புக் கூழ் எல்லோரும் விரும்பக்கூடிய இனிப்பு. இதனை எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

மழை நேரங்களிலும், ஜலதோசம் பிடித்திருக்கும் சமயங்களிலும் இதனைச் செய்து உண்ணலாம்.

சூடாக இருக்கும் போது இதனைப் பருகும் போது இதனுடைய சுவை தித்திக்கும்.

அரிசி மாவு மற்றும் மண்டை வெல்லத்தை மட்டுமே பயன்படுத்தி இது தயார் செய்யப்படுகிறது.

இனி சுவையான அரிசி இனிப்பு கூழ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 1 கப் (1 பங்கு)

மண்டை வெல்லம் (தூளாக்கியது) – 1 கப் (1 பங்கு)

தண்ணீர் – 7 கப் (7 பங்கு)

செய்முறை

பச்சரிசி மாவினை இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவினைக் கரைத்ததும்

தூளாக்கிய மண்டை வெல்லத்தில் மீதமுள்ள ஐந்து கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் தண்ணீர் சேர்த்ததும்

வெல்லம் ஊறிய தண்ணீரை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

வெல்லம் முழுவதும் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டவும்.

வடிகட்டியதும்

வடிகட்டிய வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்துக் கொதித்ததும், கரைத்து வைத்துள்ள அரிசி மாவினை சிறிது சிறிதாக வெல்லக் கரைசலில் சேர்க்கவும்.

அரிசி மாவினைச் சேர்க்கும்போது

அடுப்பினை மீடியம் தீயில் வைத்து கலவையைக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கலவை நன்கு கொதித்து சற்று நேரத்தில் கெட்டிபடத் துவங்கும்.

கொதிக்க ஆரம்பிக்கும் போது

அரிசி மாவு சர்க்கரைக் கரைசலில் வெந்து நன்கு வாசனை வரும். இதுவே சரியான பதம்.

இப்போது அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

சுவையான அரிசி இனிப்புக் கூழ் தயார்.

அரிசி இனிப்புக் கூழை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இக்கூழ் நன்கு பசி தாங்கும் இயல்புடையது.

பள்ளி விட்டு பசியோடு வரும் குழந்தைகளுக்கும் சூடாக இதனைத் தயார் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கும் போது சுக்கு சேர்த்து கூழ் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மண்டை வெல்லத்திற்குப் பதிலாகக் கருப்பட்டி அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து கூழ் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.