அழியாத ஆனந்தமான ஆற்றல் – கவிதை

புத்தகத்தை நேசி பூக்களை சுவாசி
காற்றின் கதவுகளை திறந்து கடந்தவன் நான்தானே

பூக்களின் புன்னகையில்
கவிதையின் கவித்துவத்தில்
அலைகளின் ஓசையில் புவியின்
சுற்றுவட்ட பாதையில்

எனக்கு உடல் எதற்கு உயிர் எதற்கு?
இயற்கையின் இன்பங்களில்
இசையாக ஒளிந்திருப்பேன்

கண்ணதாசன் தத்துவத்தில் தனித்திருப்பேன்
வாலியின் வாலிபத்தில் குடியிருப்பேன்
வைரமுத்துவின் வைரமான வரிகளில் மறைந்திருப்பேன்
மழைத்துளிபோல் மறுசுழற்சியில் மண்ணில்
எப்போதும் ஒளிந்திருப்பேன்

கலப்படம் இல்லாத கனவாய்
கவிதைகளில் கலந்திருப்பேன்
அருவிகளின் ஆனந்தமாய்
குயில்களின் குரலில்
குன்றாது இருப்பேன்
விண்ணுக்கும் முகிலுக்கும் இடையில்
பஞ்சு மெத்தைபோல் படர்ந்திருப்பேன்

எனக்கு அழிவென்பது இல்லை
அனைத்துலகும் என்னை
அரவணைத்துக் கொள்ளும்!
அன்பாய், அறனாய் ஆற்றலில் மத்தியில்
அமர்ந்திருப்பேன்! அலைகடலாய்!

க.கருப்பணன்
மதுரை-625107
கைபேசி: 8838619670

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.