இனிய எளிய தமிழில் கணினி தகவல்

தமிழில் மிக அருமையான வலைப்பூவாக vikupficwa.wordpress.com என்ற‌ தளம் விளங்குகிறது.

கணினி அறிவு என்பது பொதுவாக அனைவருக்கும் இக்காலத்தின் தேவையான ஒன்றாகிறது. ஆனால் இதைப் பெற அதிகப்படியானவர்கள் கடினப்படுவதில்லை. தேடுவதில்லை.

காலஓட்டத்தில் கணினி அறிவியல் அளப்பறிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதை உலகம் கண்டுகொண்டிருக்கிறது.

அதைச் சாமானியர்களும் பெற நினைக்கும் போது, அனைத்து வழிகளும் வேற்றுமொழியில் இருந்து அறிய விடாமல் செய்கின்றன. இதனால் அனைவரும் கணினிஅறிவைப் பெறவில்லை. இதைப் போக்க இவ்வலைப்பூ உதவுகிறது.

முதுமுனைவர் ச.குப்பன் அவர்கள் ஓரு அறிவுப்புதையல். அவரின் கடின உழைப்பால் இவ்வலைப்பூ உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவரின் வலைப்பூவில் இடம்பெற்றிருக்கும் தலைப்புக்களைப் பார்த்தாலே இது தெரியும்.

அத்தலைப்புக்களை இனி காணலாம். அதற்குப் பின் இவ்வலைப்பூ குறித்து அவரின் செயலை அவர் கூறும்சொற்களாலே அறியலாம்.

இவ்வலைப்பூவின் பிரிவுகள்( அடைப்புக்குள் கட்டுரைகளின் எண்ணிக்கை)

• ஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)

• அக்சஸ் -2003 -தொடர் (54)

• அக்சஸ்2007 தொடர் (34)

• அறிவுரைகள்(Tips) (717)

• ஆண்ட்ராய்டு (137)

• ஆழ்கற்றல்(Deep Learning) (4)

• இணைய உலாவி (2)

• இணைய பயன்பாடுகள் (17)

• இணையம்& இணையதளம்(web or internet) (571)

• இயக்கமுறைமை (48)

• இயந்திர கற்றல்(Machine Learning(ML)) (2)

• உடல் ஆரோக்கியம் (4)

• எம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (57)

• ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)

• ஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (27)

• ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)

• ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)

• ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)

• ஓப்பன் ஆஃபிஸ் பொது (12)

• ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)

• ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)

• கட்டற்றமென்பொருள் (406)

• கணித பயன்பாடு (6)

• கணினி செய்திகள் (73)

• கணினிமொழி (computer language) (95)

• கருவிகள்(Tools) (327)

• கோப்பமைவுகள் (6)

• சங்கிலி தொகுப்பு (Blockchain) (21)

• செயற்கை நினைவக ம் (2)

• செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligent(AI)) (13)

• செயல்முறை பயிற்சி(Tutorial) (144)

• சேவையாளர் (14)

• ஜாவா (5)

• டேலி ஈ ஆர் ப்பி 9 (16)

• தரவுதளம் (14)

• திற மூலமென்பொருள் (252)

• நகைச்சுவை(comedy) (41)

• நச்சுநிரல் (4)

• பயன்பாடுகள்(Applications & Utilities) (442)

• பாதுகாப்பு(Security) (110)

• பிட்காயின் (4)

• புதிர் (2)

• பைதான் (16)

• பொருட்களுக்கான இணையம் (15)

• மின்னஞ்சல்(e-mail) (53)

• மேககணினி (10)

• மொழிமாற்றி( compiler) (1)

• ராஸ்பெர்ரி பிஐ (17)

• லினக்ஸ்(Linux) (94)

• லிபர் ஆ-பிஸ் பேஸ் (6)

• லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)

• லிபர் ஆஃபிஸ் கால்க் (30)

• லிபர் ஆஃபிஸ் பேஸ் (6)

• லிபர் ஆஃபிஸ் பொது (40)

• லிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)

• வன்பொருள் செயல்முறை (hardware) (85)

• வரைச்சட்டங்கள் (9)

• வலைபதிவு (bloggs) (15)

• வலைப்பின்னல் (13)

• வாட்ஸ்அப் (9)

• விண்டோ (window) (108)

• வேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (3)

• Extensible Business Reporting Language (XBRL) (2)

• IDE (10)

• Uncategorized (3)

இவ்வலைப்பூ குறித்து ஆசிரியர் கூறுவது:
நான் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன்.

நான் பள்ளியிறுதி வகுப்புவரை மட்டுமே பயின்ற பின் பணியிலிருந்து கொண்டே வணிகவியல் இளநிலைபட்டமும்(B.com) , அடக்கவிலை கணக்கர் மாமன்றம் நடத்தும் இறுதிதேர்வில் வெற்றிபெற்று அதில் முதுநிலை உறுப்பினராகவும் (FCMA), நிறுமச்செயலர் மாமன்றம் நடத்தும் இறுதிதேர்வில் வெற்றிபெற்று அதில் இளநிலை உறுப்பினராகவும் இருக்கின்றேன்(ACS).

மேலும் நாம் வாழும் இந்தச் சமுதாயத்திற்கு நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்ற உந்துதலினால் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தபடும் நிருவாக கணக்கியல் முறை(Management Accounting Practice) பற்றிய முனைவர் பட்ட ஆய்வை பகுதிநேரமாகச் செய்து முடித்து முனைவர் பட்டம்(Phd) பெற்றுள்ளேன்.

1996 முதல் 1999 வரை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரையிலும் பின்னர் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுவரை கள்ளக்குறிச்சி  கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் கணக்குஅலுவலராகவும் அதன்பின்னர் 2005ஆம் ஆண்டுமுதல் 2007ஆம் ஆண்டுவரையிலும் பின்னர் 2010 ஆம் ஆண்டுமுதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும்  கள்ளக்குறிச்சி  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமைக் கணக்கராகப்  பணிபுரிந்துவந்தேன் 2007 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டு வரை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்து வந்தேன்.

2012 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தலைமைக் கணக்கராகப்  பணிபுரிந்து வருகின்றேன்.

விவசாயிகளின் நிலைபற்றியும், மக்களின் ஆரோக்கியமான உடல் நிலை பற்றியும் அவ்வப்போது தினமனி நாளிதழின் நடுபக்க கட்டுரை எழுதி வருகின்றேன்.

கணினியிலும் தமிழிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் கணினியின் பயன்பாடுகள் பற்றி தமிழ் கம்யூட்டர் என்ற திங்கள் இருமுறைவெளியாகும் இதழில் கணினி பற்றிய கட்டுரைகளும், ஓப்பன் ஆஃபிஸ்,லிபர் ஆஃபிஸ் ,கட்டற்ற பயன்பாடுகள்  பற்றிய தொடர்கட்டுரைகளும் தற்போது எழுதிவருகின்றேன்.

இதன் அடிப்படையில் 24.03.2012 அன்று  தமிழ் இதழ்கள் பதிப்பாளர் சங்கம்  எனக்கு 2012ஆம் ஆண்டிற்கான பயனெழுத்து படைப்பாளி  என்ற விருதினை வழங்கியுள்ளது  என்ற செய்தியினை மிக மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

மேலும்

1.எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9,

2.வியாபாரத்தில் எக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும்,
என்பன போன்ற பாமரனும் கணினியை பயன் படுத்திகொள்ளும் வகையில் கணினிமென்பொருள் பற்றிய இரு புத்தகங்கள் நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் சென்னை என்ற நிறுவனத்தின் மூலம் அக்டோபர் 2010 ஆம் ஆண்டில் வெளியிடபட்டுள்ளன.

அதுமட்டுமின்றி

1.www.arugusarugu.blogspot.inஎன்ற என்னுடைய வலைபூவில் பொதுவான தகவல்களையும், சிறுசிறு கதைகளையும், சட்டங்களை பற்றிய எளிய விளக்கமும் இதுவரையில் சுமார் 300 பதிவுகளும்

2.www.vikupficwa.wordpress.com என்ற என்னுடைய வலைபூவில் எளிய தமிழில் கணினிபற்றிய தகவல்களை இதுவரையில் சுமார் 2311 பதிவுகளும்,

3.www.skopenoffice.blogspot.com என்ற என்னுடைய பிரிதொரு வலைபூவில்  எளிய தமிழில்  ஓப்பன் ஆஃபிஸ் எனும் பயன்பாடு பற்றிய விளக்க கையேடாக இதுவரையில் 93 பதிவுகளும் ஆகிய என்னுடைய இணைய வலை பூக்களில்(Web Blog), அவ்வப்போது எழுதி வருகின்றேன்.

தமிழின் சிறந்தவலைப்பூக்களின் வரிசையில் முக்கிய இடத்தை இது பெறுகிறது என்பது சரிதானே. இத்தளத்திற்குச் செல்ல vikupficwa.wordpress.com சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

2 Replies to “இனிய எளிய தமிழில் கணினி தகவல்”

  1. தங்களின் கட்டுரைகளின் வாயிலாக இணையங்களை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது…
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி..

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.