உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தனியாகவோ, சாதத்துடன் சேர்த்து உண்ணவோ ஏற்ற நொறுக்குத்தீனி ஆகும். இதனை எளிதாக வீட்டிலே செய்யலாம்.

குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போதோ, ஸ்நாக்ஸ் பாக்ஸ்க்கோ இதனை செய்து கொடுத்து அனுப்பலாம். சுலபமான முறையில் சுவையான உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1/2 கிலோ கிராம்

சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1 1/2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு

செய்முறை

முதலில் உருளைக் கிழங்கின் தோலினை சீவிக் கொள்ளவும்.

 

தோல் சீவிய உருளைக்கிழங்கு
தோல் சீவிய உருளைக்கிழங்கு

 

பின்னர் உருளைக் கிழங்கினை நீளவாக்கில் 1/4 இன்ஞ் தடிமனில் வட்ட வட்டமாக வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

நீளவாக்கில் வில்லைகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு
நீளவாக்கில் வில்லைகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு

 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெட்டிய உருளைக் கிழங்கு வில்லைகளைப் போடவும்.

 

தண்ணீரில் ஊற வைத்த வில்லைகள்
தண்ணீரில் ஊற வைத்த வில்லைகள்

 

பின்னர் வட்ட வில்லைகளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக விரல் வடிவத்தில் வெட்டி தண்ணீரில் போடவும்.

 

விரல் வடிவில் வெட்டப்பட்ட வில்லைகள்
விரல் வடிவில் வெட்டப்பட்ட வில்லைகள்

 

தண்ணீரில் விரல் வடிவ வில்லைகள்
தண்ணீரில் விரல் வடிவ வில்லைகள்

 

விரல் வடிவத்துண்டுகள் ஒரே அளவில் இருக்குமாறு வெட்டிக் கொள்ளவும். அப்போதுதான் எண்ணெயில் பொரித்து எடுக்கும்போது ஒரே சீராக வேகும்.

உருளைக் கிழங்கு துண்டுகளை வடிகட்டியில் போட்டு வடித்துக் கொள்ளவும்.

 

வடிகட்டியில் வடிக்கும் போது
வடிகட்டியில் வடிக்கும் போது

 

காட்டன் துணியில் வடிகட்டி உருளைக் கிழங்கு துண்டுகளை உலர்த்தி விடவும்.

 

துணியில் உலர்த்தும் போது
துணியில் உலர்த்தும் போது

 

ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கிளறிக் கொள்ளவும்.

 

பொடி வகைகள்
பொடி வகைகள்

 

உருளைக் கிழங்கின் மேற்புறம் உலர்ந்த பின்பு அதனை எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் சோள மாவுக் கலவையை சேர்க்கவும்.

 

உருளைக்கிழங்கில் பொடி வகைகளைச் சேர்த்ததும்
உருளைக்கிழங்கில் பொடி வகைகளைச் சேர்த்ததும்

 

எல்லா கிழங்கிலும் சோள மாவுக் கலவை படுமாறு நன்கு குலுக்கி விடவும்.

 

பொரிக்கத் தயார் நிலையில்
பொரிக்கத் தயார் நிலையில்

 

வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும்.

பின்னர் அதில் மசாலா பிரட்டிய உருளைக் கிழங்கினை தேவையான அளவு சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தயார்.

 

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்
உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சோள மாவிற்கு பதிலாக அரிசி மாவையோ, மைதாவையோ பயன்படுத்தி சிப்ஸ் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய்ப் பொடிக்குப் பதில் மிளகுப் பொடி சேர்த்தும் சிப்ஸ் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.