உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பொரியல் எல்லோராலும் விரும்பப்படும் தொட்டுக்கறி வகையாகும்.

இதனை சுவையாவும், மணமாகவும் செய்யலாம். எல்லா சாத வகைகளும் ஏற்ற தொட்டுக்கறி உருளைகிழங்கு பொரியல்.

இனி சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – ½ கிலோ கிராம்

பெரிய வெங்காயம் – ¼ கிலோ கிராம்

மல்லிப் பொடி – 2 ஸ்பூன்

சீரகப் பொடி – 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 8 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3 எண்ணம் (நடுத்தர அளவு)

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

சீரகம் – 2½ ஸ்பூன்

உருளைக்கிழங்கு பொரியல் செய்முறை

உருளைக்கிழங்கினை தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதனை நன்கு கழுவிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கினை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளைத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.

 

நறுக்கிய பெரியவெங்காயம், உருளைக்கிழங்கு
நறுக்கிய உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம் 

 

பெரிய வெங்காயத்தை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாய் அகன்ற இரும்பு வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

பின்னர் அதனுடன் சிறுதுண்டுகளாக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது
பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது

 

பெரிய வெங்காயம் கால் பாகம் வெந்ததும் அதனுடன் சிறுதுண்டுகளாக்கிய உருளைக்கிழங்கினைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

பெரிய வெங்காயம் கால்பாகம் வெந்ததும்
பெரிய வெங்காயம் கால்பாகம் வெந்ததும்

 

 

உருளைக்கிழங்கை சேர்த்ததும்
உருளைக்கிழங்கை சேர்த்ததும்

 

அதனுடன் மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறி வேக விடவும்.

 

மசால் பொடி வகைகள், உப்பு சேர்த்ததும்
மசால் பொடி வகைகள், உப்பு சேர்த்ததும்

 

அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

வாணலியை மூடி போட்டு மூடவும்.

அவ்வப்போது உருளைக்கிழங்கினை கிளறி விடவும்.

 

உருளைக்கிழங்கு வதங்கும் போது
உருளைக்கிழங்கு வதங்கும் போது

 

மசால் வாடை நீங்கி உருளைக்கிழங்கு வெந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

 

உருளைக்கிழங்கு வெந்ததும்
உருளைக்கிழங்கு வெந்ததும்

 

சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

 

சுவையான உருளைக்கிழங்கு பொரியல்

சுவையான உருளைக்கிழங்கு பொரியல்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி 2½ ஸ்பூன் சேர்த்து உருளைக்கிழங்கு பொரியல் தயார் செய்யலாம்.

-ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.