ஊனமுற்றவன்

ஊனமுற்றவன்

யானைக்கும் அடி சறுக்கும்
கடவுளின் படைப்பில் நான்

 

அநாதை, திருநங்கை

கடவுளின் விடுகதைகளில்
கடவுளுக்கே விடை தெரியாத விடுகதை

 

லேப்டெக்னீசியன்

கொசுவும் லேப்டெக்னீசியனும் ஒன்று
இரத்தத்தை உறிஞ்சி எடுப்பதில்

 

வியப்பு

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கற்பிக்க
நீ என்ன ஜாதி என்று கேட்டது நிர்வாகம்

 

நிலாப்பெண்

நிலாப்பெண்ணே உன் மெய்காப்பாளன் சுக்கிரன்
நின் அருகில் முப்பொழுதும் இருக்கிறான்
உன்னையும் யாராவது கடத்திவிடுவார்களா என்ன
உன் தந்தையும் அரசியல்வாதியாக இருப்பானோ?

 

ஏளனம்

ஒரு பறவை நொண்டி கீழே விழுந்ததால்
வரும் பல  அதன் அருகில் ஆறுதலாய்
ஒரு மிருகம் இறந்தால் பல மிருகம்
வருத்தமோடு சுற்றி வரும்
செடியொன்று வளர்ந்தால் அருகாமையில்
தோட்டமாய் பல செடிகள் துணையாய்
மனிதா நீ வாழ்வில் சறுக்கி விழுந்தால்
மகிழ்ந்து சிரிக்கும் உம்மக்கள் ஏளனமாய்

– ஸ்ருதி