என் தாய்நாடு

எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்

எவர்க்கும் பொறுப்பில்லை

உழல் அதிகார துஷ்பிரயோகம் அதிகம்

பாழான அரசியலோ மிகக் கேவலம்

 

பசிபட்டினி வறுமை அகோரம்

படிப்பதற்குப் பலருக்கும் வழியில்லை

அறிவியல் அறநெறி புரிவோனை மதிப்பதில்லை

அடிவருடி அயோக்கிய னெல்லாம் மகான்கள்

 

இளைஞர்களுக்கு வழிகாட்ட தலைமையில்லை

இருளேதான் தலைவிதியென நம்பும் பேதைமை

மெல்லினிச் சாகுமிது வேறு வழியில்லை

மேதையாய் முடிவு சொன்னேன் நான்

 

என் இந்திய திருநாட்டிற்கு

யோசித்துக் கொண்டிருந்த என்னை

வாசித்துக் கொண்டு கதவோரம் நின்ற

நண்பன் கேட்டான் “உன் வயது இருபதிருக்குமா?”

 

மின்னலென மனதில் சலனம்

பல்லாயிரம் ஆண்டுகள் கண்ட‌ இந்தியாவை

இருபதே வருடங்கள் பார்த்துவிட்டு

இதன்னெ பிதற்றல்

 

காலங்கள் கடந்து வாழும்

வல்லமை இந்தியத் தாய்க்கு உண்டல்லவா?

– வ.முனீஸ்வரன்