ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2020

ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2020 பட்டியலில்,  முதல் 100 இடங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

2020-ஆம் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை 85.31 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே, தரவரிசை பட்டியலை வெளியிடுவதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள்

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை 85.31 1
2 அமிர்தா விஸ்வ வித்யா பீடம், கோயம்புத்தூர் 60.74 13
3 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 58.10 20
4 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 57.32 21
5 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 55.92 24
6 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 53.89  28
7 சென்னை பல்கலைக்கழகம், சென்னை 50.76 41
8 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் 49.40 48
9 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 48.59 51
10 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 47.27 58
11 சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 47.03 61
12 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 46.85 64
13 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 46.81 66
14 பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 44.70 77
15 ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 44.42 83
16 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 44.27 84
17 பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 44.17 85
18 பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 44.03 87

 

ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019 பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 21 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றன.

ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2020 பட்டியலில் தமிழ்நாட்டைச் சார்ந்த 18 கல்வி நிறுவனங்கள்தான் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் தமிழக கல்வி நிறுவனங்கள் நல்ல தரவரிசையைப் பெறவும்,  அதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.