கம்பு சப்பாத்தி செய்வது எப்படி?

பொதுவாக சப்பாத்தி என்றாலே கோதுமை மாவில் செய்வது வழக்கம். ஆனால் சிறுதானியமான கம்பினைக் கொண்டும் கம்பு சப்பாத்தி தயார் செய்யலாம்.

இது சுவையோடு ஆரோக்கியமானதும் கூட. நார்ச்சத்து மிக்க கம்பினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கம்பினைக் கொண்டு இடியாப்பம், லட்டு, கம்பஞ்சோறு, ரொட்டி தயார் செய்யலாம். இனி சுவையான கம்பு சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கம்பு மாவு – 3 கப்

கோதுமை மாவு – 1 கப்

தண்ணீர் – 2 கப்

கல் உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

கடலை எண்ணெய் – சப்பாத்தி சுட தேவையான அளவு

செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், கம்பு மாவினை சேர்த்து வாசனை வரும் வரை ஒரு சேர வறுக்கவும். பின்னர் அதனை ஆற விடவும்.

வாயகன்ற பாத்திரத்தில் ஆறிய கம்பு மாவு மற்றும் கோதுமை மாவினை எடுத்துக் கொள்ளவும். அதனை நன்கு கலந்து விடவும்.

தேவையான அளவு கம்பு, கோதுமை மாவு
தேவையான அளவு கம்பு, கோதுமை மாவு

தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக கம்பு மாவில் சேர்த்து உருண்டையாகத் திரட்டவும்.

மாவினை பிசையும் போது
மாவினை பிசையும் போது
உருண்டையாகத் திரட்டியதும்
உருண்டையாகத் திரட்டியதும்

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை திரட்டிய மாவில் சேர்த்து ஒரு சேரத் திரட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 மணி நேரம் மூடி வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் சேர்த்ததும்
தேங்காய் எண்ணெய் சேர்த்ததும்
ஒருசேரத் திரட்டியதும்
ஒருசேரத் திரட்டியதும்

பின்னர் உருண்டையாத் திரட்டிய மாவினை சிறுசிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.

சிறுஉருண்டைகளாக்கியதும்
சிறுஉருண்டைகளாக்கியதும்

சிறுஉருண்டையை லேசாக வட்டமாகத் தட்டி கோதுமை மாவில் பிரட்டி சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

வட்டமாகத் தட்டி கோதுமை மாவில் பிரட்டியதும்
வட்டமாகத் தட்டி கோதுமை மாவில் பிரட்டியதும்

தோசைக் கல்லினை அடுப்பில் வைத்து, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, லேசாக வெந்ததும் திருப்பிப் போட்டு, சுற்றிலும் லேசாக கடலை எண்ணெய் விடவும்.

சப்பாத்தியைச் சுடும் போது
சப்பாத்தியைச் சுடும் போது

அவ்வப்போது தோசை பிரட்டியால் சப்பாத்தியை அழுத்தி விடவும்.

வெந்ததும் சப்பாத்தியை எடுத்து விடவும்.

சுவையான கம்பு சப்பாத்தி தயார்.

கம்பு சப்பாத்தி
கம்பு சப்பாத்தி

வெஜ் குருமா, சுண்டல் குருமா ஆகியவற்றுடன் உண்ணப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

மாவு பிசையும் போது சிறிது நேரம் நன்கு அழுத்தி ஒன்று போல் பிசைந்தால், சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

கம்பு சப்பாத்திக்கு மாவினை விரிக்கும் போது, சற்று தடிமனாகவே திரட்ட வேண்டும்; மெல்லிதாகத் திரட்டக் கூடாது.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.