கம்பு சோறு செய்வது எப்படி?

கம்பு சோறு என்பது நம்முடைய பராம்பரிய உணவு ஆகும்.

கம்பு உடலுக்கு தேவையான அவசியமான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது.

இன்றைக்கு நமது உணவில் சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இன்று உள்ளோம்.

கம்பில் இருந்து புட்டு, களி, கூழ், பணியாரம் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களைத் தயார் செய்யலாம்.

இனி கம்புசோறு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கம்பு – 200 கிராம்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

கம்பு சோறு செய்முறை

முதலில் கம்பை அலசி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

நீரினை வடித்த கம்பு

 

நீரினை வடித்த கம்புபின்னர் வடிதட்டில் போட்டு தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்துக் கொள்ளவும்.

 

ஒன்றிரண்டாக அரைத்த நிலையில் கம்பு
ஒன்றிரண்டாக அரைத்த நிலையில் கம்பு

 

அடித்து வைத்துள்ள கம்பு கலவையை அளந்து கொண்டு, அதனைப் போல் இரண்டரை மடங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அளந்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

 

தண்ணீர் கொதிக்கும் நிலையில் தண்ணீர்
தண்ணீர் கொதிக்கும் நிலையில் தண்ணீர்

 

தண்ணீர் கொதித்ததும், அதில் அடித்து வைத்துள்ள கம்பு கலவையை போட்டு, தேவையான உப்பினை சேர்க்கவும்.

 

தண்ணீருடன் அரைத்த கம்பு, உப்பு சேர்த்ததும்
தண்ணீருடன் அரைத்த கம்பு, உப்பு சேர்த்ததும்

 

அடுப்பினை மிதமான தீயில் வைத்து, அவ்வப்போது கரண்டியால் கிளற வேண்டும். கலவையானது கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

 

இறக்கத் தயார் நிலையில் கம்பு சோறு
இறக்கத் தயார் நிலையில் கம்புசோறு

 

சுவையான கம்பு சோறு தயார்.

 

சுவையான‌ கம்பு சோறு
சுவையான‌ கம்பு சோறு

 

இதனை வெள்ளைப் பூண்டு குழம்பு, தேங்காய் சட்னி ஆகியவற்றுடன் உண்ண சுவையாக இருக்கும்.

 

குறிப்பு

நாட்டு கம்பைக் கொண்டு சோறு தயார் செய்தால் சுவையாக இருக்கும்.

மிக்ஸியில் அரைக்கும்போது ஒன்றிரண்டாகவே அரைக்க வேண்டும். மிக்ஸியை ஒரு சுற்று சுற்றியதும் கலவையை நன்கு கிளறி விட்டு அடுத்த சுற்று சுற்றவும்.

நன்கு மையாக அரைத்தால் அடுப்பில் வைக்கும்போது அடிப்பிடித்து விடும்.

ஊற வைப்பதால் கம்பு எளிதாக வெந்து விடும். அடுப்பில் வைத்ததும் கம்பு பொங்கிப் பொங்கி வரும். எனவே அடுப்பினை மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

கம்பு சாதம் மீந்து விட்டால் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

One Reply to “கம்பு சோறு செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.