கருப்பட்டி இட்லி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி : 500 கிராம்
உளுந்தம் பருப்பு : 125 கிராம்
கருப்பட்டி : 1 கிலோ கிராம்

 

செய்முறை

அரிசி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுந்தம்பருப்பு போட வேண்டும். அரிசியை நன்றாகத் தண்ணீர் விட்டு நனைய வைத்து கிரைண்டரில் இட்டு நன்றாக ஆட்டவும்.

உளுந்தம்பருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் கிரைண்டரில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும்.

இரண்டு மாவுகளையும் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். காலையில் மாவில் ¼ ஸ்பூன் சோடா உப்பு, தேங்காய்ப்பூ விருப்பமான அளவு, கருப்பட்டி பால் கெட்டியாகக் காய்ச்சி இலேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டுக் கிளறவும்.

இட்லித் தட்டில் வேக வைக்கவும். விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். சுவையான கருப்பட்டி இட்லி தயார்.

இந்த மாவை இளஞ்சூட்டில் தோசையாக எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுடலாம்.