கழுத்து இறுக்க நோய்

எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம் என்பார்கள். அந்தத் தலையைத் தாங்கிக் கொண்டு நினைத்தபடி இடமும் வலமுமாகவோ, மேலும் கீழுமாகவோ திருப்ப உதவுவது கழுத்து.

கழுத்துப்பகுதி தலையை அச்சாகத் தாங்குகிறது என்றால் அந்த அச்சு திருப்ப முடியாமல் இறுகிப்போனால் என்ன ஆகும்?.

தலை ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து போகும். அந்த வகையிலான பாதிப்பை உண்டாக்கும் நோய்தான் கழுத்து இறுக்க நோய்.

கழுத்து இறுக்க நோயானது வலியுடன் திரும்பிய நிலையில் கழுத்தானது தசைகளின் இறுக்கத்தால் ஏற்படுவதாகும். இந்நோயில் தலை ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் கீழ்த்தாடை தூக்கிய நிலையில் காணப்படும்.

இந்நோய் பலவிதங்களில் பாதிக்கிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே குறைபாடு ஏற்படுகிறது.

பிறப்பின்போது கழுத்து தசைகள் பாதிப்படைவதால் இரத்த ஓட்டக் குறைபாடு ஏற்படுவதாலும் குழந்தைகளுக்கு கழுத்து இறுக்க நோய் உண்டாகிறது.

பெரியவர்களுக்கு இந்நோய் மூளை சார்ந்த நரம்பு பாதிப்பான டைடோனியா என்ற (Dystonia) பாதிப்பாலும் சிலநேரங்களில் கடுமையான விபத்துக்களை சந்திப்பதிலும் இந்நோய் உண்டாகிறது.

இந்நோயின் வகைகள்

தற்காலிக கழுத்து இறுக்க நோய்

இந்த வகை கழுத்து இறுக்க நோயானது கீழ்கண்ட காரணங்களால் தற்காலிகமாக ஏற்படுகிறது. இது குறைந்தபட்சம் இரண்டு நாட்களிலிருந்து ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படுகிறது.

நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் வீக்கம்

காதுப்பகுதியில் ஏற்படும் நோய்த்தொற்று

தலையில் கடுமையான சளி தேங்குதல்

தலை மற்றும் கழுத்துப்பகுதியில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

நிரந்தர கழுத்து இறுக்க நோய்

கழுத்து தசைகள் மற்றும் கழுத்து எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் இந்த வகையான நோயானது ஏற்படுகிறது.

பிறவியிலேயே கழுத்து தண்டுவட எலும்புகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி சாய்ந்து ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுகிறது.

இந்நோயின் அறிகுறிகள்

தலையை இயல்பான நிலைக்கு திருப்ப முடியாமை

கழுத்துவலி மற்றும் கழுத்து தசைகளின் இறுக்கம்

தலைவலி

பாதிக்கப்பட்ட பக்கத்தில் தோள்பட்டை இறங்கிக் காணப்படுவது

கழுத்து தசைகளில் வீக்கம்

கீழ்தாடை ஒருபக்கமாக தூக்கிய நிலையில் தலை சாய்ந்து காணப்படுவது

இந்நோய்கான பரிசோதனைகள்

மின்தசைப்பரிசோதனை (Electro Myogram)

எக்ஸ்-ரே

ஈசிஜி

இரத்தப் பரிசோதனை

கழுத்து இறுக்க நோய் நோய்கான சிகிச்சைகள்

பொது மருத்துவ சிகிச்சை

கடுமையான கழுத்து இறுக்க நோயால் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகிறது.

அறுவைச் சிகிச்சையின் மூலம் கழுத்து தண்டுவட எலும்புகளில் பாதிப்பு இருந்தால் சரி செய்யப்படுகிறது.

இறுக்கமாக உள்ள தசைகள் நீட்டிக்கப்படுகிறது.

இறுக்கமாக உள்ள தசைகள் மற்றும் நரம்புகள் அறுவைச் சிகிச்சையின் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது.

வலிகுறைப்பிற்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இந்நோய்கான கூடுதல் அறிகுறிகள்

நரம்பு அழுத்தம், தொடர்வலி, அன்றாட வேலைகள் செய்வதில் பாதிப்பு

சமூக செயல்பாடுகளில் கூச்ச உணர்வு, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு

மனஅழுத்தம்

இந்நோய்க்கு இயன்முறை சிகிச்சையின் நோக்கம்

கழுத்துத் தசைகளில் வீக்கத்தையும் வலியையும் குறைத்தல்.

மனஅழுத்தத்தைப் போக்கி நோயாளிகளுக்கு அன்றாட வாழ்க்கைமுறையை மேற்கொள்ள பயிற்சியளித்தல்.

கழுத்து மற்றும் தலை சாய்வில் இருந்து நிமிர்த்தி சரியான நிலையில் அமைய பயிற்சி எடுத்தல்.

தண்டுவட கழுத்து எலும்புகளின் இயக்கத்தை மேம்படுத்துதல்.

 

இந்நோய்க்கு இயன்முறை சிகிச்சையானது இரண்டு நிலைகளாக மேற்கொள்ளப்படுகிறது.

1.அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய இயன்முறை சிகிச்சை

2.அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய இயன்முறை சிகிச்சை

 

அறுவைச்சிகிச்சைக்கு முன் வலி குறைப்பிற்காக மெழுகு சிகிச்சை, ஐஸ் தெரபி, மின்சிகிச்சையான TENS போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தசை இறுக்கத்தைப் போக்க அல்ட்ரா சவுண்ட் மசாஜ், இழுத்துவிடும் பயிற்சி (Stretching exercise) ஆகியவையும் கழுத்து தண்டுவட எலும்புகளுக்கு TRACTION சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

கழுத்தினை நேரான நிலையில் இருக்கச் செய்ய CERVICAL COLLER எனப்படும் கழுத்துப்பட்டை பரிந்துரைக்கப்படுகிறது.

தற்போது புதிதாக இயன்முறை மருத்துவச் சிகிச்சையில் அறிமுகமாகியிருக்கும் KINESIOLOGY TAPPING எனப்படும் முறையானது தசை இறுக்கத்தினைப் போக்கி தசை நீள உதவி புரிகின்றது.

 

அறுவைச் சிகிச்சைக்குப்பின் இயன்முறை மருத்துவ சிகிச்சையானது மிகவும் முக்கியமானதாகும்.

தசைகளின் இயக்கத்தை மேம்படுத்தவும் வலி குறைக்கவும் உடலியக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வாழ இயன்முறை மருத்துவம் துணைபுரிகிறது.

க.கார்த்திகேயன்

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர் ,
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.