காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி?

காலிபிளவர் ரோஸ்ட் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இது எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இனி சுவையான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காலிபிளவர் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

மசாலா பொடி – 1½ ஸ்பூன்

கொத்த மல்லி பொடி – ¾ ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்த மல்லி இலை – 2 கொத்து

தாளிக்க

சின்ன வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தரமானது)

கடுகு – ½ ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

 

காலிபிளவர் ரோஸ்ட் செய்முறை

முதலில் காலிபிளவரை சிறுசிறு இதழ்களாக பிய்த்துக் கொள்ளவும்.

 

காலிபிளவர்
காலிபிளவர்

 

இதழ்களாக்கப்பட்ட காலிபிளவர்
இதழ்களாக்கப்பட்ட காலிபிளவர்

 

தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி அதில் இதழ்களாகப் பிய்த்துள்ள காலிபிளவர்களைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் மூழ்க வைத்து வெளியே எடுத்து விடவும்.

தக்காளியை அலசி மிக்ஸியில் போட்டு சாறாக்கிக் கொள்ளவும்.

 

தக்காளிச் சாறு
தக்காளிச் சாறு

 

பெரிய வெங்காயத்தை தோலுரித்து நேராக வெட்டிக் கொள்ளவும்.

 

நேராக வெட்டப்பட்ட பெரிய வெங்காயம்
நேராக வெட்டப்பட்ட பெரிய வெங்காயம்

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெந்நீரிலிருந்து வெளியே எடுத்த காலிபிளவருடன் கொத்தமல்லிப் பொடி, மசாலாப் பொடி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 

காலிபிளவர் இதழ்களுடன் மசாலாப் பொடிகளைச் சேர்த்ததும்
காலிபிளவர் இதழ்களுடன் மசாலாப் பொடிகளைச் சேர்த்ததும்

 

மூன்று நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

பின்னர் மசாலா தண்ணீரிலிருந்து காலிபிளவரை தனியே எடுத்து வைத்து விடவும்.

 

மசாலாவிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட காலிபிளவர் இதழ்கள்
மசாலாவிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட காலிபிளவர் இதழ்கள்

 

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதனுடன் நேராக வெட்டிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

பெரிய வெங்காயத்தைச் சேர்த்ததும்
பெரிய வெங்காயத்தைச் சேர்த்ததும்

 

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் மசாலாத் தண்ணீரைச் சேர்க்கவும்.

 

வதங்கிய பெரிய வெங்காயம்
வதங்கிய பெரிய வெங்காயம்

 

மசாலாத் தண்ணீர் சேர்த்ததும்
மசாலாத் தண்ணீர் சேர்த்ததும்

 

அதனுடன் கரம் மசாலா மற்றும் தக்காளிச் சாறினைச் சேர்த்து கொதிக்க விடவும்.

 

கரம் மசாலா சேர்த்ததும்
கரம் மசாலா சேர்த்ததும்

 

தக்காளிச் சாறு சேர்த்ததும்
தக்காளிச் சாறு சேர்த்ததும்

 

மசால் வாடை நீங்கி தண்ணீர் குறைந்ததும் அதனுடன் காலிபிளவரைச் சேர்த்துக் கிளறவும்.

 

கலவை கெட்டியானதும்
கலவை கெட்டியானதும்

 

காலிபிளவரைச் சேர்த்ததும்
காலிபிளவரைச் சேர்த்ததும்

கலவை நன்கு கெட்டியானதும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கி விடவும். சுவையான காலிபிளவர் ரோஸ்ட் தயார்.

 

இறக்குவதற்குத் தயாரான பதம்
இறக்குவதற்குத் தயாரான பதம்

காலிபிளவர் ரோஸ்ட்
காலிபிளவர் ரோஸ்ட்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தக்காளிச் சாறினைச் சேர்க்கும்போது உணவு நிறமூட்டி சேர்த்து காலிபிளவர் ரோஸ்ட் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.