கொரோனாவும் குருவின் குமறலும்

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்போது தான் உலக நாடுகள் சற்றே மூச்சு விட ஆரம்பிக்கின்றன. ஆனால், இந்நோயின் விளைவாக பாதிக்கப்படுவோர் ஏராளம்.

அதில் ஒரு வகையோர் தான் பேராசிரியர்கள். அதுவும் தனியார் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்.

அவர்களின் அவல நிலையை பற்றி, கொரோனாவும் குருவின் குமறலும் என்ற தலைப்பில் இந்த வார சிந்தனையை விதைப்போம் வாருங்கள்.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் தங்கள் வேலையை இழந்தனர். பலர் தங்களுடைய வேலையை இழக்காமல் உள்ளனர். இதில் பணியை செய்யாமல் ஊதியம் இல்லாமல் தங்கள் பொருளாதார நிலையை இழந்து தவிப்போர் பலர்.

 

குறிப்பாக கல்லூரி பேராசிரியர்கள் பலர் தனியார் கல்லூரியில் பணிபுரிகின்றனர். ஒரு சில பல்கலைகழகங்கள் கொரோனா காலகட்டத்தால் இணைய வழி வகுப்பினை ஊக்குவித்தன‌.

பல்கலைகழத்தின் மேற்பார்வையில் இயங்கும் கல்லூரிகள், இணைய வழி வகுப்பினை எடுக்குமாறு பேராசிரியர்களுக்கு உத்தரவிட்டன‌.

இதில் இவர்களுக்கு என்ன சிரமம் இருக்கு? அவர்களுக்குத் தான் மாதம் ஆனால் ஊதியம் வந்துவிடுமே என்று நம் மனதில் வினாக்கள் எழலாம்.

அதாவது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அல்லது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழிகாட்டுதலின் படி ஊதியம் வழங்க வேண்டும் . ஆனால் அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.

குறைவாக வழங்கினாலும் தவறில்லை ஆனால் அதை முறையாகவும் வழங்குவ‌தில்லை என்பதே இங்கு சிரமம். ஏனென்றால் மூன்று மாதங்கள், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என சேர்த்து வழங்கப்படுகிறது.

எப்படியோ ஊதியம் வழங்கி விடுகின்றனர். சாதாரண காலகட்டத்தில் கூட மூன்று, நான்கு மாதங்கள் கழித்து ஊதியம் வாங்குவதே பெரும் சிரமமாக உள்ளது என கருதுகின்றனர்.

ஆனால் இந்நேரம் கொரோனாவின் கோரப்பிடியால் நடுத்தர மக்கள் ஏழை மக்களாக மாறும் நிலை உள்ளது. அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணமின்றி ஆசிரியர்கள் அல்லாடுகின்றனர்.

ஒருசில கல்லூரிகள் 50% ஊதியம் வழங்குகின்றனர். அதை வழங்க‌ சில கல்லூரிகள் / பல்கலைகழகங்கள் இணைய வழி வகுப்பு எடுத்த ஆவணங்களை கேட்கின்றனர்.

இணைய வசதியை புதுப்பிக்க கூட பணமில்லாத‌ அவல நிலையில் அவர்கள் குமுறுகின்றனர்.

கல்லூரிகள் பேராசியர்களுக்கு தருவதோ குறைந்த ஊதியம்.  கொரோனாவால் தருவது 50% ஊதியம். இதுவும் இன்னும் வழங்கபடவில்லை என வருந்துகின்றனர்.

கடன் வாங்கி காலம் தள்ளும் அவர்கள், இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ என்று கலங்கிப் போய் நிற்கிறார்கள்.

 

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என்று டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறினார்.

அவரின் உன்னதமான வார்த்தைகளுக்கு இண‌ங்க, நம்பிக்கையான உறுதியான இளைஞர்களை உருவாக்கும் பேராசிரியர்களின் அவல நிலையைப் பாருங்கள்….

அன்றோ கல்வியை வழங்கிய குருவிற்கு அவருக்கு வேண்டியவை காணிக்கையாக வழங்கப்பட்டன‌. இன்றோ கல்வியை கற்பிக்கும் பேராசிரியர்களுக்கு வழங்குவது ஊதியம். இதை நம்பிதான் அவர்களும் அவர்களின் குடும்பங்களும்.

ஒரு குருவின் வழிகாட்டுதலால் தான் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவாகினார்.

அவரை போல பல கலாம்களை உருவாக்கும் குருவின் இன்றைய‌ நிலையோ….. கூற இயலவில்லை.

இதை சொல்லாமல் சொல்லும் பேராசிரியர்கள்…..

கல்லூரி நிர்வாகங்கள் தான் இதை சரி செய்ய வேண்டும்.

கொரோனாவும் குருவின் குமறலும் பற்றி ஒரு நிமிடமாவது யோசியுங்கள்.

சமூக பார்வை வேண்டும் என்றும் நம் மனதில்…..

 

சதிஷ்

அ.சதிஷ்ணா
மருந்தியல் பட்டதாரி
8438574188

2 Replies to “கொரோனாவும் குருவின் குமறலும்”

  1. இணையவழி கல்வியை ஊக்கப்படுத்தும் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்களின் ஊதியம் வழங்குதலையும் இணையதள வழியாகவே ஆய்வு செய்து நெறி படுத்தலாம். செய்வார்களா?

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.