கோதுமை இட்லி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கோதுமை : 300 கிராம்
உளுந்தம் பருப்பு : 75 கிராம்

 

செய்முறை

கோதுமையை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்ட வேண்டும். உளுந்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் ஆட்டிஉப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.

8 மணி நேரம் வைத்த பின் இட்லியோ, தோசையோ சுடலாம்.

கோதுமை இட்லி போன்று தீட்டிய கம்பு, கேப்பைகளிலும் மாவு ஆட்டி இட்லி, தோசை போடலாம். இவை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். இவைகளுடன் காய்கறி சேர்த்தும் காய்கறி இட்லி தயார் செய்யலாம்.