சங்கர் பாலி செய்வது எப்படி?

சங்கர் பாலி வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது செய்யப்படும் இனிப்பு வகை ஆகும்.

இது பொதுவாக மைதா, ரவை, வெள்ளைச் சர்க்கரை மற்றும் நெய்யினைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவான இது உடனடி சக்தியை உடலுக்கு வழங்கக்கூடியது.

நான் இந்த செய்முறையில் கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கொண்டு இதனைத் தயார் செய்துள்ளேன்.

மிதமான இனிப்பினைக் கொண்ட சங்கர் பாலி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய நொறுக்குத் தீனியாகும்.

இனி சுவையான சங்கர் பாலி இனிப்பினை தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப் (தோராயாமாக 400 மில்லி லிட்டர் அளவு)

நாட்டுச் சர்க்கரை – 1/4 கப் (தோராயமாக 100 மில்லி லிட்டர் அளவு)

தண்ணீர் – 1/4 கப் (தோராயமாக 100 மில்லி லிட்டர் அளவு)

தேங்காய் எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

உப்பு – மிகவும் சிறிதளவு

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் ஏலக்காய் பொடியினைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

வாயகன்ற பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை, தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஒரு சேரக் கலக்கவும்.

நாட்டுச் சர்க்கரை
நாட்டுச் சர்க்கரை
தண்ணீர் சேர்த்ததும்
தண்ணீர் சேர்த்ததும்
எண்ணெய் சேர்க்கும் போது
எண்ணெய் சேர்க்கும் போது

பாத்திரத்தை அடுப்பில் சிம்மிற்கும் சற்று அதிகமான தீயில் வைத்து நாட்டுச் சர்க்கரை கரையும் வரை வைத்திருந்து இறக்கவும்.

சர்க்கரைக் கரைந்ததும்
சர்க்கரை கரைந்ததும்

இதனை சற்று ஆற விடவும்.

நாட்டுச் சர்க்கரை கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது அதில் கோதுமை மாவினைக் கொட்டி ஒருசேரக் கிளறி, பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.

கோதுமை மாவினைச் சேர்க்கும் போது
கோதுமை மாவினைச் சேர்க்கும் போது

தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

திரட்டிய மாவு லேசாக பிசுபிசுப்பு பதத்தில் இருக்கும்.

சப்பாத்தி மாவாகத் திரட்டியதும்
சப்பாத்தி மாவாகத் திரட்டியதும்

திரட்டிய மாவினை நான்கு சம பங்குகளாகப் பிரித்து திரட்டிக் கொள்ளவும்.

சிறுஉருண்டைகளாக்கியதும்
சிறுஉருண்டைகளாக்கியதும்

இதிலிருந்து ஒன்றினை எடுத்து எண்ணெயைப் பயன்படுத்தி 1/2 இன்ச் தடிமனுள்ள சப்பாத்தியாக விரிக்கவும். பின்னர் இதனை டையமண்ட் வடிவத்தில் கத்தியால் வெட்டவும்.

டையமண்ட் துண்டுகளாக்கியதும்
டையமண்ட் துண்டுகளாக்கியதும்

இவ்வாறு எல்லா மாவினையும் டையமண்ட் வடிவத்திற்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

எல்லாவற்றையும் டையமண்ட் துண்டுகளாக்கியதும்
எல்லாவற்றையும் டையமண்ட் துண்டுகளாக்கியதும்

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும்.

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது தேவையான அளவு டையமண்ட் துண்டுகளைச் சேர்க்கவும்.

டையமண்ட் வடிவ மாவுத்துண்டினை எண்ணெயில் சேர்த்ததும் ஒருசில நொடிகளில் சிறிய குமிழியுடன் மேலே எழும்பி வரும்.

டையமண்ட் துண்டுகள் சலசலவென வெந்து மேற்பரப்பின் எண்ணெய் குமிழிகள் அடங்கியதும் வெளியே எடுத்து எண்ணையை வடிகட்டி ஆற விடவும்.

சுவையான சங்கர் பாலி தயார்.

சங்கர் பாலி
சங்கர் பாலி

இதனை காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்துப் பயன்படுத்தலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மைதா, வெள்ளைச் சர்க்கரை மற்றும் நெய் அல்லது வெண்ணெயைப் பயன்படுத்தியும் இந்த இனிப்பினைத் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.