சமையல் குறிப்புகள்

உங்கள் சமையலறை சிறக்க‌ சில சமையல் குறிப்புகள்.

சீனி டப்பாவில் சூடக்கட்டிகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

பிளாஸ்கில் சூடான திரவத்தை ஊற்றும் போது பிளாஸ்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும்.

கைதுடைக்கும் துணி, சமையல் அறையில் பயன்படுத்தும் துணி ஆகியவற்றை ஷாம்பு கலந்த நீரில் அலசினால் துணி பளிச்சென்று இருக்கும்.

சாம்பார் வைக்கும் போது இறக்கும் தருவாயில் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்து பொடி செய்து போட்டு அத்துடன் சிறிது கசகசாவையும் சேர்த்து பொடி செய்து போட்டால் சாம்பார் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

உளுந்தம் பருப்பை ஊறவைத்து நைஸாக அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பை அரைத்து தோண்டும் சமயத்தில் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து வடை செய்தால் வடை நன்றாக இருக்கும்.

உளுந்தம் பருப்பை அரை ஊறல் ஊறவைத்து வற்றல், உப்பு சேர்த்து நைசாக இல்லாமல் ஒன்றிரண்டாக அரைத்து அதில் சிறிதளவு பச்சைக் கடுகை சேர்த்து சிறுசிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.

தோவை மாவில் உருளைக் கிழங்கை வேகவைத்து அரைத்து தோசை ஊற்றினால் தோசை நன்றாக வரும். சுவையாகவும் இருக்கும்.

புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.

வாணலியில் இருக்கும் இரும்புக் கறையை நீக்க சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி ஊற வைத்து கழுவினால் கறை போய்விடும்.

சமைக்கும் போது குழம்பிலோ, கூட்டிலோ உப்பு கூடினால் பச்சை உருளைக் கிழங்கை வெட்டி குழம்பிலோ, கூட்டிலோ சேர்க்கவும். இவ்வாறு செய்வதால் உப்பு குறைந்து சரியான சுவை கிடைக்கும்.

தோசை மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலைகளை காம்பு நீக்காமல் மாவு முழுவதும் (மாவு தெரியாமல்) மூடி வைக்கவும். மாவினை வாழையிலையைக் கொண்டும் மூடி வைக்கலாம். மாவுப் பாத்திரத்தை தண்ணீரில் வைக்கலாம்.

மருதாணி அரைக்கும் போது அதனுடன் சிறிது வெந்தயத்தை சேர்த்து அரைத்தால் கையில் கலர் நன்றாகப் பிடிக்கும்.

பால்குக்கரில் இருந்து வரும் நீராவியில் கைகளைக் காட்டினால் கைகள் மிருதுவாகும்.

முட்டைக் கோஸை தண்ணீரில் வேக வைத்து பின் அந்த தண்ணீரை ஆற வைத்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

வேப்பங்கொழுந்தை நன்றாக அரைத்து சில சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து பருக்கள் மீது தடவ பருக்கள் சீக்கிரம் மறையும்.

வெளியூருக்குச் செல்லும் முன் படுக்கும் மெத்தையில் கற்பூர வில்லைகளை வைத்தால் மெத்தையில் எறும்பு, பூச்சிகள் வராமல் இருக்கும்.

– சித்ரா முருகேசன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.