சாம்பார் சாதம் செய்வது எப்படி?

சாம்பார் சாதம் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். இனி மணமான சாம்பார் சாதம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சாப்பாட்டு அரிசி – 500 கிராம் (1 பங்கு)

துவரம் பருப்பு – 200 கிராம்

கத்தரிக் காய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

கேரட் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

முருங்கைக் காய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (நடுத்தர அளவு)

தக்காளி – 3 எண்ணம் (நடுத்தர அளவு)

முருங்கைக் கீரை – ஒரு கைபிடி அளவு (சுத்தம் செய்தது)

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

கொத்தமல்லி இலை – 3 கொத்து

மசாலா பொடி – 3 ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

தண்ணீர் – 3½ பங்கு

நெய் – 3 ஸ்பூன்

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

வெந்தயம் – ½ ஸ்பூன்

சீரகம் – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

 

சாம்பார் சாதம் செய்முறை

சாப்பாட்டு அரிசியைக்  கழுவிக் கொள்ளவும்.

அரிசியில் உள்ள தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

கத்தரிக் காய், கேரட், தக்காளி, முருங்கைக் காய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி, நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தாளிக்க உள்ள சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

 

காய்கறிகள்
காய்கறிகள்

 

துவரம் பருப்பை கழுவிக் கொள்ளவும்.

குக்கரில் 3½ தண்ணீர் ஊற்றி அதில் கழுவிய துவரம் பருப்பினைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.

 

பருப்பு கொதிக்கும்போது
பருப்பு கொதிக்கும்போது

 

பின்னர் அதில் நறுக்கிய காய்கறிகளான கத்தரிக் காய், கேரட், தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் காய், முருங்கைக் கீரை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் அரிசி, மசாலா பொடி, பெருங்காயப் பொடி, தேவையான உப்பு சேர்க்கவும்.

 

காய்கறிகள் மற்றும் மசாலாப் பொடியைச் சேர்த்ததும்
காய்கறிகள் மற்றும் மசாலாப் பொடியைச் சேர்த்ததும்

 

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

கடுகு வெடித்ததும் தாளிதத்தை குக்கரில் உள்ள அரிசிக் கலவையில் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் நெய் சேர்த்து ஒரு சேரக் கிளறி குக்கரினை மூடி விசில் போடவும்.

 

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

 

ஒரு விசில் வந்ததும் குக்கரினை சிம்மில் வைத்து மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

விசில் அடங்கியதும் குக்கரினைத் திறந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு சாதத்தினை மாற்றி ஒருசேர கிளறி விடவும்.

 

குக்கரை திறந்த பின்பு
குக்கரை திறந்த பின்பு

 

வேறு பாத்திரத்திற்கு சாதத்தை மாற்றியதும்
வேறு பாத்திரத்திற்கு சாதத்தை மாற்றியதும்

 

சுவையான சாம்பார் சாதம் தயார். இதனை சூடாக உருளைக் கிழங்கு பொரியல், அப்பளத்துடன் பரிமாறலாம்.

 

சுவையான சாம்பார் சாதம்
சுவையான சாம்பார் சாதம்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் அவரைக் காய், முள்ளங்கி, சவ் சவ், உருளைக் கிழங்கு சேர்த்து சாம்பார் சாதம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.