சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?

சிறுதானிய இடியாப்பம் மிகவும் சத்தான சுவையான சிற்றுண்டி ஆகும். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியம் என்றழைக்கப்படுகின்றன.

இந்த சிற்றுண்டி தயார் செய்ய மேற்கூறிய தானியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இனி சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

சிறுதானிய இடியாப்ப மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

சாமை – 1 கப்

தினை – 1 கப்

வரகு – 1 கப்

குதிரைவாலி – 1 கப்

கேழ்வரகு – 1 கப்

கம்பு – 1 கப்

சோளம் – 1 கப்

 

சிறுதானிய இடியாப்ப மாவு தயார் செய்யும் முறை

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும்.

 

தினையை வறுக்கும் போது
தினையை வறுக்கும் போது

 

பின் அதனை ஆறவைத்து மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

 

சிறுதானிய இடியாப்ப மாவு
சிறுதானிய இடியாப்ப மாவு

 

இதனை நன்கு ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரத்தில் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

சிறுதானிய இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்

சிறுதானிய இடியாப்ப மாவு – 1 கப்

கல் உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 கப்

செய்முறை

தேவையான அளவு கல் உப்பினை இரண்டு கப் தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும்.

தண்ணீர் கொதித்ததும் இறக்கி விடவும். சிறுதானிய இடியாப்ப மாவில் உப்பு சேர்த்த சுடுதண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும்.

 

சிறுதானிய இடியாப்ப மாவில் உப்பு சேர்த்த சுடுதண்ணீரைச் சேர்க்கும் போது
சிறுதானிய இடியாப்ப மாவில் உப்பு சேர்த்த சுடுதண்ணீரைச் சேர்க்கும் போது

 

மொத்த மாவினையும் சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

 

சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டப்பட்ட சிறுதானிய மாவு
சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டப்பட்ட சிறுதானிய மாவு

 

இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

 

இடியாப்பமாகப் பிழியப்பட்ட‌ சிறுதானிய மாவு
இடியாப்பமாகப் பிழியப்பட்ட‌ சிறுதானிய மாவு

 

பின் இதனை இட்டிப்பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

 

ஆவியில் வேக வைக்கப்பட்ட சிறுதானிய மாவு
ஆவியில் வேக வைக்கப்பட்ட சிறுதானிய மாவு

 

சுவையான சிறுதானிய இடியாப்பம் தயார்.

 

சுவையான சிறுதானிய இடியாப்பம்
சுவையான சிறுதானிய இடியாப்பம்

 

சத்துக்கள் நிறைந்த இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இந்த இடியாப்பத்துடன் தேங்காயப் பூ, தேங்காய் பால், குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் சிறுதானிய இடியாப்ப மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பமாகவும் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.