சீனா லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 250 கிராம்

நெய் : 50 கிராம்

முந்திரி : 25 கிராம்

திராட்சை : 25 கிராம்

சீனி : 500 கிராம்

தேங்காய் : 1 மூடி

 

செய்முறை

சீனியை நைசாக மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய துறுவலையும், முந்திரி பருப்பு, திராட்சையும் சேர்த்து நெய்யில் வறுத்து எடுக்க வேண்டும்.

வாணலியில் நெய்யை ஊற்றி நன்றாக சூடானதும் கடலைமாவை கொட்டி பச்சை வாசைன நீங்கும் படி வறுக்கவும். பின் அதோடு நைசாக சீனி, வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துறுவல் ஏலம்பொடி தூவி நன்றாக கிளற வேண்டும்.

பின்னர் அதை கீழே இறக்கி சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான சீனா லட்டு ரெடி.