சூரரைப் போற்று – மதிப்பெண்கள்

திரு.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை திரைக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று.

திரு.கோபிநாத் ஏர் டெக்கான் (Air Deccan) நிறுவனர். அவர் எழுதிய‌ சிம்பிளி ப்ளை (Simply fly) என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையானது அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தொழில் முனைவோரின் தடைகள், கஷ்டங்கள், அவரின் முயற்சிகள் என கதை அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் தங்களது நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இயக்குநருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். த‌மிழ் திரையுலகம் இம்மாதிரி நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இத்திரைப்படக்கதை சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளான எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் என்பதை பிரதிபலித்து இருக்கிறது.

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இனிது வழங்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்! 

துறை வாரியான மதிப்பெண்கள் (100க்கு)

கதை90
திரைக்கதை85
வசனம்80
இயக்கம்90
பாடல்85
பின்னனி இசை80
ஒளிப்பதிவு85
நகைச்சுவை80
ஆபாசமின்மை90
புதுமை85
சூரரைப் போற்று – மதிப்பெண்கள்

திரைப்படத்திற்கு மதிப்பெண்கள் – 85 / 100

(மதிப்பெண்கள் 50க்கு கீழ் – பார்க்கத் தேவை இல்லை, 50 – 60 பார்க்கலாம், 60 – 80 நன்று, 80 – 100 மிக நன்று)

இயக்கம் – சுதா கொங்கரா

தயாரிப்பு – சூர்யா

கதை – விஜய் குமார்

மூலக்கதை – உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது

திரைக்கதை – சுதா கொங்கரா, சாலினி

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிப்பு – சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி

வெளியீடு – 12 நவம்பர் 2020

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.