சௌ சௌ கிரேவி செய்வது எப்படி?

சௌ சௌ கிரேவி அசத்தலான சைடிஷ். சப்பாத்தி, தோசை, இட்லி மற்றும் வெள்ளை சாதம் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

இதனுடைய மணமும் சுவையும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். விழாக் காலங்களிலும் விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

இனி சுவையான சௌ சௌ கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சௌ சௌ – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

கொத்த மல்லி இலை – 2 கொத்து

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா தயார் செய்ய

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

கொத்த மல்லி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் ‍- 1/4 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டீ ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 4 எண்ணம்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு ‍- 1/4 டீ ஸ்பூன்

சீரகம் ‍- 1/4 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

சௌ சௌ கிரேவி செய்முறை

முதலில் சௌ சௌவை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி நேராக கீறிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் கொத்தமல்லி, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து லேசாக வறுக்கவும்.

கொத்தமல்லி, சீரகம், மிளகு சேர்த்ததும்

30 நொடிகள் கழித்து பட்டை கிராம்பு சேர்த்து வறுக்கவும்.

கிராம்பு பட்டை சேர்த்ததும்

30 நொடிகள் கழித்து மிளகாய் வற்றலை சேர்த்து மசாலாப் பொருட்களின் வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் சேர்த்ததும்

வறுத்த மசாலாப் பொருட்களின் சூடு ஆறியதும் அவற்றை மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வறுத்த மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களைக் கொரகொரப்பாக அரைத்ததும்

பின்னர் அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் சேர்த்ததும்

அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி சேர்த்ததும்

தக்காளியில் தண்ணீர் இருப்பதால் இந்த மசாலா தயார் செய்யும்போது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

மசாலா

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.

தாளிதம் செய்யும் போது

கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்ததும்

2 நிமிடங்கள் கழித்து அதனுடன் சௌ சௌ மற்றும் தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

சௌ சௌ சேர்த்ததும்

பின்னர் அதனுடன் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு மூடி வைத்து அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

5-7 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து சௌ சௌ காய் வெந்ததை உறுதிபடுத்திக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள கெட்டியான மசாலாவைச் சேர்த்து சௌ சௌவுடன் சேர்த்து கிளறி 1/2 நிமிடம் வேகவிடவும்.

மசாலா சேர்த்ததும்
மசாலாவுடன் சௌ சௌயைக் கிளறியதும்

அதனுடன் தேவையான தண்ணீர், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மஞ்சள் பொடி சேர்த்ததும்

ஒரு கொதி வந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து மூடியிடவும்.

அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விடவும்.

கொதிக்கும் போது

எண்ணெய் பிரிந்து தேவையான பதத்திற்கு வந்ததும் கொத்த மல்லி இலையைத் தூவி அடுப்பினை அணைத்து விடவும்.

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

சுவையான சௌ சௌ கிரேவி தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மசாலா அரைக்கும்போது சிறிதளவு முந்திரிப் பருப்பு அல்லது பொட்டுக் கடலை சேர்த்து அரைத்து கிரேவி தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் சௌ சௌவை தனியாக வேக வைத்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கிரேவி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.