தலை சிறந்த விருது

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம ஸ்ரீ விருது பெற்றார் ஓர் இசைக் கலைஞர். அவருடைய‌ பத்திரிக்கையாளர் சந்திப்பில், “இந்த விருது பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

“குடியரசுத் தலைவரிடம் எனக்கு விருது கொடுக்க சொன்னாங்க. சரின்னு சொல்லி அவர் விருது கொடுத்தாரு. இதுல இவர் கையால விருது கிடைத்தது குறித்து பெருமைப்பட ஏதுமில்லை” என்றாராம்.

“உண்மையாக‌ நீங்கள் பெருமை பட்ட தருணம் ஏதாவது உள்ளதா ?” என மீண்டும் கேள்வி கணை பாய….

அந்த கலைஞர் பதில் சொன்னார்.

“ஒரு திருமண ஊர்வலத்தில் நான் வாசித்துக்கொண்டு, மணமக்களுடன் ஊர் சுற்றி வந்தபோது என்னை மறந்து ஒரு சங்கதி வாசித்தேன்.

அப்போது தலையில் விளக்கு தூக்கி கொண்டு வந்த ஒரு தொழிலாளி “சபாஷ்” என சத்தமாகக் கூறி கைதட்ட, அவர் தலையிலிருந்த விளக்கு கீழே விழுந்தது.

என்னை மறந்து நான் வாசிக்க, தன்னை மறந்து அவர் ரசித்து கூறிய சபாஷ் என்ற‌ ஒற்றை வார்த்தைக்கு ஈடான பாராட்டு எதுவும் கிடையாது. அதுவே எனது தலை சிறந்த விருது என நான் கருதுகிறேன்.” என்றாராம்.

‘குட்டுப் பட்டாலும் மோதிரக் ககையால குட்டுப் படணும்’ என்ற பழமொழியும் ‘தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து பெறப்படும் பாராட்டே மிகச்சிறந்த பாராட்டு’ என்பதைத்தான் குறிப்பிடுகிறது.

இன்றைய உலகில் விருதுகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. இதனால் வழங்குபவருக்கும் வாங்குபவருக்கும் நிலைத்த புகழ் கிடைக்கப் போவதில்லை.

தனக்குரிய தலை சிறந்த விருது எது என்பதை உண்மைக் கலைஞன் ஒவ்வொருவனும் அறிவான்.

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

One Reply to “தலை சிறந்த விருது”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.