தாழம்பூ ‍- கவிதை

கார்கால மலரே!

கடவுள் விரும்பாத தாழையே!

பார்முழுதும் மணம்

பரப்பி நிற்கின்றாய்!

மடல் விரித்து மதி

மயங்க செய்கின்றாய்!

பொன்மஞ்சள் நிறத்தவளே!

பெண்கூந்தல் அலங்கரிப்பவளே!

குங்கும வாசத்திலும்

கூந்தல்தைல வாசத்திலும்

வாசம் புரிபவள் நீயே!

அடிமுடி கண்டேன் எனப்

பொய்யுரைத்து

ஆதிசிவன் வெறுப்பிற்கு

ஆளாகி நின்றாய்!

பொய்யுரைத்த பின்னே

பின் விளைவு என்னவென்று

பூவுலகிற்கு போதனை

கூறி சென்றாய்!

பூநாகம் உனக்குள்ளே

என்று உன்னை ஒதுக்கிய

இம்மக்கள்,

காமம், துரோகம், வன்மம்,

பொறாமை, பேராசை என்ற

ஐந்தலைநாகம் ஒதுக்கி

வாழ்வாரா?

ரோகிணி கனகராஜ்

One Reply to “தாழம்பூ ‍- கவிதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.