தீர்வு எதுவெனத் தெரியலையே – கவிதை

காலம் பதில் சொல்லுமா

கயவர்களைத் தான் வெல்லுமா?

நீதி நிறைவேறுமா

இல்லை

நாதியற்றவரைக் குறைகூறுமா?

மண்ணுக்கு மட்டும் சுதந்திரமா

மண்ணில் பிறந்த பெண்ணுக்கு

இதுவே நிரந்தரமா?

அடிமைத்தனம் இன்னும் போகலையே

ஆணாதிக்கம் இன்னும்

தீரலையே

குடிமகன் தொல்லை தாங்கலையே

கொடுமையின் பிடியும் தளரலையே

கரம் பிடித்த கணவனும்

கயவனே பலருக்கு

நாட்டுக்குள்ளே நல்லவனே

வீட்டுக்குள்ளே பாதகனே

போதும் போதும் பெண்ணினமே

பட்டது போதும் பெண்ணினமே

பொல்லா மாந்தரின்

சொல்லாத் துயருக்குத்

தீர்வு எதுவெனத் தெரியலையே!

தீர்வு எதுவெனத் தெரியலையே!

க.சிந்து
சென்னை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.