துளசி வழிபாடு

துளசிதேவி திருக்கார்த்திகை மாதம் பௌர்ணமியில் அவதரித்தாள். துளசிதேவி லட்சுமி தேவியின் அம்சமாகப் பிறந்தவள்.

எனவே கார்த்திகை மாதம் பௌர்ணமியில் துளசியைப் பூஜிப்பவர்கள் லட்சுமி கடாட்சத்தை அடைவார்கள்.

துளசிச் செடியின் கீழ் தேங்கும் நீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் இருப்பதாக ஜதீகம். அங்கே மகாவிஷ்ணுவும், மற்ற அனைத்து தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.

துளசி தீர்த்தத்தால் மகாவிஷ்ணுவிற்கு அபிசேகம் செய்தால் 1000 அமிர்த குடங்களால் அபிசேகம் செய்வதற்கு சமமாகும் என்பது கருத்து.

துளசியை பௌர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது.

அசுத்தமாக இருக்கும்போது அறவே நெருங்கக் கூடாது.

சிரார்த்தம், விரதம், தானம், தேவபூஜை மற்றும் தேவதாபிரதிஷ்டை முதலியவற்றில் துளசியையைச் சேர்க்க வேண்டும்.

ஹோமம் செய்யும்போது துளசிச் செடியின் குச்சிகளை ஹோமத்தில் போடக் கூடாது.

கோவில்களில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.

கார்த்திகை பௌர்ணமியில் ஸ்ரீ துளசி தேவியை தூப, தீப மற்றும் நைவேத்தியங்களால் பூஜித்தால் எந்த தீங்கும் நெருங்காது. மகாவிஷ்ணுவின் அருளும் மகாலட்சுமியின் அருளும் சேர்ந்தே கிடைக்கும். செல்வமும் செல்வாக்கும் தேடி வரும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.